| ADDED : மார் 25, 2024 03:28 AM
போடி : வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலில் குடும்பத்தினர் மட்டுமின்றி, ரத்த உறவுகளின் சொத்து விபரமும் சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அசையும், அசையா சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதில் குடும்பத்தினர் சொத்துக்களும் அடங்கும். சிலர் கூட்டுக் குடும்பமாக இருப்பதால் கூட்டு சொத்தாகவும் இருக்கும். எனவே, வேட்பாளர்களின் சகோதரர், சகோதரிகளின் சொத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். அவர் எவ்வகை வரி செலுத்துகிறார், அரசு பணியில் உள்ளாரா, வேட்பாளர் மீதுள்ள குற்ற வழக்குகள், அதன் தன்மை, தண்டனை குறித்த விபரங்களையும் தெரிவிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.