வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உங்களது ஆ தி மு க கட்சிக்கு ஓட்டு போடுவது அனைத்து சமுதாய மக்கள். இதை நினைவில் நிறுத்துங்கள் ஏன் மற்றைய பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களின் நிலை தெரியவில்லையா ??? அனைத்து மக்களுக்கும் சேர்ந்து குரல் கோ டுங்கள்
சென்னை : 'தமிழகம் முழுதும் உடனே சிறப்பு குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ - மாணவியரின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில், சீரமைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகம் முழுதும் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள, 1,331 மாணவ - மாணவியர் விடுதிகளில், 99,000 மாணவ - மாணவியர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு விதிமுறைப்படி உணவுப்படி வழங்கப்படுகிறது.பண்டிகை காலங்களில், சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்க, மாதம் ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கு, 100 ரூபாயு-ம், கல்லுாரி மாணவருக்கு, 150- ரூபாயும் வழங்கப்படுகிறது.சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், பல கல்லுாரி மாணவர்கள் தங்கியுள்ளனர். அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ளன. இரவு நேரங்களில், வளாகத்தில் வெளியாட்கள் மதுபானங்கள் அருந்துகின்றனர்.அசைவ உணவு வழங்கும்போது, மூன்றில் ஒரு பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுகிறது. பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளன. இதுகுறித்து, பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகம் முழுதும் உடனே சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ - மாணவியரின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர்செய்ய வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
உங்களது ஆ தி மு க கட்சிக்கு ஓட்டு போடுவது அனைத்து சமுதாய மக்கள். இதை நினைவில் நிறுத்துங்கள் ஏன் மற்றைய பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களின் நிலை தெரியவில்லையா ??? அனைத்து மக்களுக்கும் சேர்ந்து குரல் கோ டுங்கள்