உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சி தலைவர்கள் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பணியாளர்கள்: புகார் செய்தால் வேலை பறிபோகும்

ஊராட்சி தலைவர்கள் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பணியாளர்கள்: புகார் செய்தால் வேலை பறிபோகும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உள்ளாட்சி அமைப்பில், மலேரியா தடுப்பு பணியாளர்களை, ஊராட்சி தலைவர்களின் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.தமிழகத்தில் மலேரியா, டெங்கு உள்பட கொசுக்களால் பரவும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தினமும், 250 முதல் 400 ரூபாய் என்ற தினக்கூலி அடிப்படையில், இவர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கொசு ஒழிப்பு பணிகளுடன், ஊராட்சி தலைவர்களின் வீடுகளில் தோட்டவேலை, துணி துவைத்தல், பாத்திரம் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல வேலைகளை செய்ய வற்புறுத்துவதாக, அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மலேரியா தொழிலாளர்களுக்காக போராடும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது: மாநிலம் முழுதும், 38,000 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக இவர்கள் நியமிக்கப்படுவதால், ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் வீடுகளிலும் வேலையும் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். சம்பளம் தராத வேலையாட்களாக இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தால், பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர். எனவே, கொசு ஒழிப்பு பணியாளர்களை, பொது சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்; அவர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்குவதுடன், குறைந்தபட்சம் 21,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
ஜூலை 18, 2024 11:32

ஊராட்சி இருக்கட்டும், தற்போது சென்னையில் தெருக்களை சுத்தம் செய்து வந்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். எந்த தெருவிலும் யாருமே வந்து சுத்தம் செய்வதே இல்லை, ஆனால் தெருவில் இருக்கும் குப்பைகளை சரியான நேரத்துக்கு எடுத்து செல்கிறார்கள், தெருக்களை சுத்தம் செய்துவந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. மாறாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் அமைச்சர்கள் பெருமக்கள் வருமுன் எப்படி சுத்தம் செய்வார்களோ அப்படி செய்கிறார்கள், அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சொன்ன பதில், மாதமொரு முறை ஒவ்வொரு ஏரியாவையும் சுத்தமாக வைக்க உத்தரவு வந்துள்ளது என்று கூறினார்கள், வந்தே மாதரம்


Duruvesan
ஜூலை 18, 2024 09:14

ஆனாலும் விடியலு ரொம்ப ஸ்ட்ரிட்டு ஒப்பீஸ்சர் பா


கல்யாணராமன்
ஜூலை 18, 2024 08:23

அவ்வாறு சொந்த வேலை வாங்குவது தவறு, அதை மட்டும் கண்டிக்காமல் சந்தடி சாக்கில் அவர்களுக்கு பணி நிரந்தரம், வேலை பாதுகாப்பு, ரூ 21000 மாத சம்பளம் என்று கோரிக்கை வைப்பவர் அவர் வீட்டில் வேலை பார்பவருக்கு இப்படி நிரந்த வேலை, சம்பளம் ரூ 21000 பென்சன் என்று கொடுப்பாரா? அரசு பணம் என்ன அவர் அப்பன் வீட்டு பணமா?


Rangarajan
ஜூலை 18, 2024 05:24

ஏற்கனவே காவலர்கள் காவல் துறை உயர் அலுவலர்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள், இப்பது இவர்களாக? வெட்கம். பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:24

அதான... கண்டவனும் சாப்பிடும் பொழுது தொழிலாளர்களை சாப்பிடக்கூடாதா என்பது சரியான அணுகுமுறை. அதே சமயம் இவர்களுக்கு பயிற்சி கொடுத்து வேறு உருப்படியான வேலைகளுக்கு பயன்படுத்தி சந்தை மதிப்பின்படி சம்பளம் கொடுக்கலாம். அவர்களும் மகிழ்வார்கள்.


Mani . V
ஜூலை 18, 2024 04:54

"இரும்புக்கரம்" ஆபீசர் இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை