உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை பாதை ரயில்வே அமைச்சரிடம் மனு

இரட்டை பாதை ரயில்வே அமைச்சரிடம் மனு

சென்னை:மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை, இரட்டை ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி, ரயில்வே அமைச்சரிடம், மத்திய இணை அமைச்சர் முருகன் மனு அளித்துள்ளார்.இதுகுறித்து, மத்திய அமைச்சர் முருகன் விடுத்துள்ள அறிக்கை:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில், இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டி, மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதை நிறைவேற்றும் விதமாக, அதற்கான மனுவை, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து வழங்கினேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை