வாசகர்கள் கருத்துகள் ( 1 )
question 45 a
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான, கணித பாடத்தேர்வின் வினாத்தாள் எளிதாகவும், வணிகவியல் பாடத்தேர்வின் வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், மாணவர்கள் தெரிவித்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. ஏற்கனவே மொழிப்பாடத் தேர்வுகள் முடிந்த நிலையில், நேற்று முக்கிய பாடங்களின் தேர்வுகள் துவங்கின. அதன்படி, கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், ஜவுளி மற்றும் வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன. இவற்றில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தேர்வுகள் குறித்து, மாணவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்தனர். அதன்படி, வணிகவியல் தேர்வில், சிறு வினாக்கள் எளிதாகவும், ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடினமாகவும் இருந்ததாக கூறினர். நுாறு மதிப்பெண் எதிர்பார்த்த பெரும்பாலான மாணவர்களுக்கு, 80 முதல் 85 மதிப்பெண்களே கிடைக்கும் என்றனர். அதேநேரம், கணித பாடத்தேர்வின் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததால், பெரும்பாலான மாணவர்கள், 'சென்டம்' வாங்குவர் என்றும் கூறினர்.கணித தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. ஐந்து மதிப்பெண்ணுக்கான 45வது கேள்வி, மிகவும் சிந்திக்க வைத்தது. மூன்று மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா மட்டும் கடினமாக இருந்தது.- ச.யதர்ஷினி பிரபா,கம்மவார் சங்கம் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, தேனி.
question 45 a