உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவன்!

உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாய் உயிரிழந்த நிலையிலும், பிளஸ் 2 மாணவன் தேர்வு எழுதச் சென்று விட்டு, பிறகு இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cjmgvym5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், திருநெல்வேலியில் தாய் உயிரிழந்த சோகத்தையும் மறைத்துக் கொண்டு பிளஸ் 2 மாணவன் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். வள்ளியூரைச் சேர்ந்த மாணவன் சுனில் குமார் என்பவரின் தாயார் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவர் காலமானார். தேர்வுக்கு தயாராகி இருந்த சுனில் குமார், உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டு, கண்ணீருடன் சென்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வை முடித்து விட்டு வந்து இறுதிச்சடங்கில் பங்கேற்று தாயுக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S.L.Narasimman
மார் 04, 2025 13:49

அந்த கடவுளின் குழந்தைக்கு கடவுளின் கருணை வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும்.


Madras Madra
மார் 04, 2025 11:00

இது பெரும் சோதனைதான் அந்த சிறுவனுக்கு அதை சாதனையாக மாற்று தம்பி வாழ்த்துக்கள்


வாய்மையே வெல்லும்
மார் 04, 2025 07:40

என்னுடைய தாய் இறக்கும் நாள் எனக்கு கார்ப்பரேஷன் ஆபீசில் இருந்து போன் ... உனக்கு கோவிடு தொற்று உறுதி ஆயிட்டு என ரிப்போர்ட் வந்திருக்கு இறுதி சடங்கில் கலக்கவேணாம்.


அம்பி ஐயர்
மார் 04, 2025 07:34

கஞ்சா.... குடி.... ரவுடித் தனம் செய்வது..... இப்படிப்பட சூழலில் இப்படியும் சில மாணவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.... அந்த மாணவனுக்கு ஆறுதலும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகளும்


Subramanian
மார் 04, 2025 06:55

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


இராம தாசன்
மார் 04, 2025 00:05

நல்லாவருவாய் தம்பி - அந்த தாயின் ஆசீர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கும். வாழ்க வளமுடன்.. நன்றாக படித்து உன் தாயின் கனவை நிறைவேற்றுவாயாக


Meenakshisundaram J
மார் 03, 2025 22:19

You will comeout very successful in your exams and further steps.


கத்தரிக்காய் வியாபாரி
மார் 03, 2025 21:16

எழுத வார்த்தையில்லை.... தம்பிக்கு இனி கடவுளே தாய்


KayD
மார் 03, 2025 21:13

ஒரு எதிரிக்கு கூட இப்படி நடக்க கூடாது. சுனில் குமார்கு நடந்து விட்டது. அவன் தாயார் அவனை மிக ஆசீர்வதிது வழி நடத்த என்னோட பிரார்த்தனைகள்.


Ray
மார் 03, 2025 20:43

அந்த தெய்வத்தாய் பிள்ளையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்குவார் என்பது சர்வ நிச்சயம். தாயிற்சிறந்த கோயிலுமில்லை


சமீபத்திய செய்தி