உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில், 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு 'ஏசி' வசதியுடன் தயார் செய்யப்பட்டது. தியானத்தில் பிரதமர் மவுன விரதமும் மேற்கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1kl2acns&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=03வது நாளான இன்று (ஜூன் 01) சூரிய நமஸ்காரம் செய்ய தியானத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடி வெளியே வந்தார். மேகமூட்டம் காரணமாக, சூரிய நமஸ்காரம் செய்யாமல், பிரதமர் மோடி மீண்டும் உள்ளே சென்று தியானத்தில் ஈடுபட்டார். மாலை3 மணியளவில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கிளம்பி, படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையின் வலது பாதத்தில் மலர் தூவியும், மாலையை வைத்தும் மரியாதை செலுத்தினார். பிறகு சிலையை சுற்றிப்பார்த்தார்.இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பும் பிரதமர், கரைக்கு சென்று விருந்தினர் மாளிகை செல்ல உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டில்லி செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Justin Jose
ஜூன் 02, 2024 09:09

நாடு நல்லா இருக்க களத்தில் இறங்கி வேலை செய்யணும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 01, 2024 20:02

இங்கே கதறிய தேசவிரோத கட்சிகளின் அடிவருடிகள் வரும் டிசம்பரில் PoK யை மீட்கும் போது நெஞ்சிலும், வாயிலும் அடித்துக்கொண்டு கதறி அழுவார்கள் .....


கனோஜ் ஆங்ரே
ஜூன் 01, 2024 18:46

எங்கே போனாலும்... கடைசியா தமிழ்ப் புலவன் காலில்தான் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டியிருக்கு... குறிப்பா, உங்க ஊர் பாஷைல சொல்லணும்னா... “மதராசிவாலா”கிட்டதான் வந்தாகணும்...


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 01, 2024 20:00

அட அறிவாளியே ..... திருவள்ளுவர் ஹிந்து சமய நம்பிக்கைகளை ஒட்டி திருக்குறள் இயற்றியவர் ..... உனது கும்பலோ தமிழன் ஹிந்து அல்ல என்று கூவும் கும்பல் ..... அப்புறம் எங்கே வந்தார் தமிழ்ப்புலவர் ????


sundarsvpr
ஜூன் 01, 2024 18:39

தியானம் செய்கிறோம் நாம். நாம் பயனடைய. இது தவறாக கருதக்கூடாது. எந்த பலனையும் எதிர்பாராமல் செய்திடும் பிரார்த்தனைதான் சால சிறந்தது என்று வேதம் கூறுகிறது. .இந்த நம்பிக்கையில் நரேந்திரன் செய்துள்ளார். பலனை ஆண்டவன் கொடுப்பான்.


Senthoora
ஜூன் 02, 2024 07:19

நிட்சயமாக அவரின் கேமெரா மானுக்கும் முதலில் பலன் கிடைக்கும், ஏன்னா பூவோடு சேர்ந்த நார் மனக்குமாம்.


panneer selvam
ஜூன் 01, 2024 18:15

Venga , Tomorrow you can also do fasting in Vivekanda memorial . Please plan with your family . Go ahead


J.V. Iyer
ஜூன் 01, 2024 17:14

உங்களால் உலகம் பெருமை அடைகிறது.


வாத்தியார்
ஜூன் 01, 2024 17:09

தன்நெஞ்சறிவது பொய்யற்க. பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


R Bramananthan
ஜூன் 01, 2024 16:51

தியானம் செய்தாலும் செய்யா விட்டாலும் NDA தான் வெல்லும். மேலும் தியானம் வேறு தேர்தல் முடிவு வேறு.


அசோகன்
ஜூன் 01, 2024 16:08

தியானம் என்பது ஆன்மீகத்தின் முதல் படி.....


Velan Iyengaar
ஜூன் 01, 2024 15:43

மக்களுக்கு என்ன லாபம் ??


சுராகோ
ஜூன் 01, 2024 17:49

தியானம் செய்வதால் மேலும் மனது தூய்மை அடையும். தூய்மை அடையும் மனது நல்லதை செய்யும். இதெல்லாம் 200 உ பி ஸ் க்கு புரியாது. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்.


hari
ஜூன் 01, 2024 19:41

உன் மொக்கை கமெண்ட் மாதிரி யாருக்கும் யூஸ் இல்லை வேலா


sridhar
ஜூன் 04, 2024 06:58

கொடைக்கானலில் ஒருவன் golf ஆடினானே , அதனால் யாருக்கு லாபம் .


மேலும் செய்திகள்