உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீது 17 வழக்கு: போலீஸ் பதிலளிக்க உத்தரவு

சவுக்கு சங்கர் மீது 17 வழக்கு: போலீஸ் பதிலளிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட, 17 வழக்குகளும், ஒரே சம்பவத்துக்கானதா என்பது குறித்து விளக்கம் அளிக்க, போலீஸ் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக, 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு எதிராக அளித்த புகாரில், கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nu03nsgf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதைத் தொடர்ந்து, சென்னை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட, 16 போலீஸ் நிலையங்களில், சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. சில வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக்கூடாது என உத்தரவிடும்படியும், சங்கர் தரப்பில் கோரப்பட்டது. போலீஸ் தரப்பில், 'சங்கருக்கு எதிராக பதிவான அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவம் தொடர்புடையதா என்பதை சரிபார்க்க வேண்டும்; அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்' என கூறப்பட்டது.இதையடுத்து, அனைத்து வழக்குகளும், ஒரே சம்பவத்துக்காக பதிவு செய்யப்பட்டதா என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
ஆக 09, 2024 10:24

Abolish Courts Not Punishing Power-Misusing Rulers, Stooge Officials esp Investigators,Judges & Vested False Complainant Gangsters Women, SCs, Unions/ groups, advocates etc etc


Barakat Ali
ஆக 09, 2024 09:40

வாய்மொழி உத்தரவு போட்டாரு .... அதனால பதினேழு வழக்குகள் போட்டோம் ன்னா போலீச்சு சொல்லும் ????


Kasimani Baskaran
ஆக 09, 2024 07:23

அடையாளம் தெரியாத வெவ்வேறு சம்பந்தமில்லாத நபர்களை வைத்துத்தான் வழக்குப்போடும் முறை அமலில் இருக்கிறது. ஆகவே இந்த வழக்குகள் முடிந்தாலும் அடுத்து புதிதாக வழக்குகள் போடப்படும். கிள்ளியது, முறைத்துப்பார்த்தது, மேலே இடித்தது போன்ற குற்றங்கள் கூட இருக்கலாம்.


T.sthivinayagam
ஆக 09, 2024 04:58

நரித்தனம் சூட்சும்ம் எத்தனை நாளைக்கு எடுபடும் சிறை ஊறுதியா


Bala
ஆக 09, 2024 02:31

உலகமே கணினியில் சில மணித்துளிகளில் பார்த்துவிடும் ஆனால் திருட்டுத் திராவிடிய காவல் விளையாட்டுத் துறைக்கு 3 கிழமையா ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை