உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி அருகில் உள்ள வீடுகளில் போலீஸ் வேட்டை: போதை பொருளுடன் 19 மாணவர்கள் கைது

கல்லுாரி அருகில் உள்ள வீடுகளில் போலீஸ் வேட்டை: போதை பொருளுடன் 19 மாணவர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்களின் குடியிருப்புகள் மற்றும் வெளிமாநில மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில், நேற்று 1,000க்கும் மேற்பட்ட போலீசார், கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். கஞ்சா பொட்டலங்களுடன் பிடிபட்ட 19 மாணவர்கள், கஞ்சா விற்பனை செய்த தாபா உரிமையாளர் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகரில் உள்ள கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலை உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலை விடுதிகள் மற்றும் பல்கலையை சுற்றியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில், அந்த மாணவர்கள் தங்கி உள்ளனர். மாணவ -- மாணவியர், மென்பொருள் நிறுவன ஊழியர்கள், வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து, இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றன.குறிப்பாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக, வெளிமாநில மாணவர்கள், உள்ளூர் ரவுடிகள், முன்னாள் மாணவர்களுக்கு இடையே அடிதடி சம்பவங்கள் நடப்பது வழக்கம்.கடந்த சில மாதங்களாக, பொத்தேரி ஏரிக்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளதாக, தாம்பரம் போலீஸ் கமிஷனரக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில், 1,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர். இந்த குடியிருப்பில் இருந்த 500 வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து வெளியில் செல்வோர் மற்றும் புதிதாக வருவோரின் வாகனங்களை முழுமையாக சோதனை செய்தனர்.இதில், பல்வேறு வீடுகளில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. 500 கிராம் கஞ்சா, கஞ்சா சாக்லெட் - 6, கஞ்சா எண்ணெய் 20 மி.லி., கஞ்சா புகைக்க பயன்படும் மிஷின் 8, ஹோக் பவுடர் -6 கிலோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மாணவர்கள், கஞ்சா வியாபாரிகள் உள்ளிட்ட 21 பேரிடம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எங்கே வாங்கப்பட்டன; விற்பது யார் என்பது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொத்தேரி பகுதியில் உள்ள அபோட் வேல்யூ அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று 168 குழுக்களாக 1,000 காவலர்களுடன் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா, கஞ்சா சாக்லெட் கைப்பற்றப்பட்டது. இதில், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த, பொத்தேரியில் உள்ள தாபா உரிமையாளரான, உ.பி.,யை சேர்ந்த டப்லு உட்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில், 60 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் உள்ளிட்டவை, யாரும் உரிமை கோரப்படாதவைகளாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் உரிமையாளர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொத்தேரி மற்றும் அதை சுற்றி உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கஞ்சா விற்பனை தொடர்பான தொழில் போட்டியில், 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்துரு, 28, என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு, பொத்தேரி பகுதியில் பணி என கூறி, நேற்று முன்தினம் இரவு அழைத்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி என நினைத்தே பெரும்பாலான போலீசார் சென்றனர். அங்கு சென்ற பின்னரே கஞ்சா வேட்டை என தெரியவந்துள்ளது. அந்தளவுக்கு ரகசிய நடவடிக்கையை, போலீசார் மேற்கொண்டுள்ளனர். இல்லையேல், கஞ்சா வியாபாரிகளுக்கு தகவல் கசிந்திருக்கும் என சொல்லப்படுகிறது.

கஞ்சா கிடைக்கும் இடங்கள்

காட்டாங்கொளத்துார்-, காவனுார், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, தைலாவரம், பொத்தேரி ஏரிக்கரை, காயரமேடு சாலை, வல்லாஞ்சேரி, ஓட்டேரி, சிங்கபெருமாள் கோவில், பகத்சிங் நகர், ஓட்டேரி, ரத்தினமங்கலம், பெருமாட்டுநல்லுார், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்கள் கூறுகின்றனர்

அதிரடி தொடரும்!

கடந்த மாதம் 12ம் தேதி, போதை விழிப்புணர்வு பேரணியை முதல்வர் துவக்கி வைத்து, தமிழகம் முழுதும் நடந்தது. அதை அடிப்படையாக கொண்டு, தாம்பரம் காவல் ஆணையரகத்தில், கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள பகுதிகளை ரகசியமாக கண்காணிக்க, போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டார்.கண்ணகி நகர், துரைப்பாக்கத்தில், கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், அடுத்ததாக எந்த இடத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்பதை, உளவுத் துறை மூலம் கண்காணித்தனர். அதில், காட்டாங்கொளத்துார், மறைமலை நகர் பகுதிகளில் வெளி மாநில மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்தது.ஆந்திரா மாநில மாணவர்கள் அதிகம் தங்கியுள்ளதால், ரகசியாக கண்காணித்து, நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதிரடி சோதனை தொடரும்.- காவல் துறை அதிகாரிகள்

பயங்கர ஆயுதங்களுடன்

கஞ்சா விற்ற ரவுடி கைதுகூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனை நடந்து வருவதாக, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கூடுவாஞ்சேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நந்திவரம் கற்பகாம்பாள் நகரில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா விற்ற செல்வமணி, 29, என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்த, 2.25 கிலோ கிலோ கஞ்சா மற்றும் நான்கு பெரிய அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.போலீசார் விசாரணையில். செல்வமணி தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram pollachi
செப் 01, 2024 17:47

சர்வீஸ் அபார்ட்மெண்ட்


Ramesh Sargam
செப் 01, 2024 12:39

தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு முதலீடு திரட்டுவது மிக அவசியம். அதைவிட மிக மிக அவசியம் போதைப்பொருள் புழக்கத்துக்கு/பழக்கத்துக்கு ஒரு நிரந்தர முடிவு.


Kanns
செப் 01, 2024 12:24

All College Area & Students have Degenarated with Drugs- Alchohol-Smoking, Indecency-Obscenity- Rowdyism-Gangsterisms etc etc. Targeting only SRM CollegeArea is Vestedly Biased


Corporate Goons
செப் 01, 2024 10:22

மோடியையும் மோடி கும்பலையும் விட போதையில் உள்ளவர்கள் உண்டா ? போதையில் நாட்டையே ஒரு சிலருக்கு அந்நியர்களுக்கு விற்றுவிட்டு, பறிகொடுத்துவிட்டு , ஏமாந்துபோய் விரக்தியின் உச்சியில் இருக்கும் மோடியின் குமபலுக்கு பல் யூத ஒரு துரும்பு தேடி அலைகிறார்களா ?


raja
செப் 01, 2024 08:28

தமிழகத்தை போதையில் நம்பர் ஒன்னு ஆக்கிய இந்தியாவின் நம்பர் ஒன்னு முதல்வர் ஒன்கொள் கோவால் புற விடியலை சாரை வாழ்த்துவோம் வாங்க....


Kasimani Baskaran
செப் 01, 2024 09:49

அமேரிக்கா போய் வாழ்தலாம்னு பேராசை... ஓசி டிக்கெட் கெடைக்காது...


titanicjack
செப் 01, 2024 08:17

சாராயத்துல வராத போதையா கஞ்சாவுல வந்துர போகுது? இல்ல சாராய போதைல செய்யாத தப்ப கஞ்சா போதைல செஞ்சுருவானுங்களா?


Palanisamy Sekar
செப் 01, 2024 06:24

பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை நடப்பதாக கூறுகின்ற போலீசார் இன்றைய தினம் போல ஏன் முந்தைய ஆண்டுகளில் தேடுதல் வேட்டையை நடத்தவில்லை? பல ஆண்டுகள் என்றதும் கி மு காலத்துக்கு போயிடாதீங்க. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுன்னு நினைவில் வைத்து செய்தியை படியுங்கள். கல்லூரி மாணவர்கள் பக்கம் இப்போதான் போகிறார்கள். பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே கஞ்சா புழக்கம் கனஜோராக நடந்துகொண்டுள்ளதாக செய்திகள் வந்த பிறகும் கூட இதுபற்றி சோதனை செய்யவே இல்லை. ஏன் ?ஆளும்தரப்பினர் சம்பந்தப்பட்ட வியாபாரம். வட்டம் மாவட்டம் என்று பலரால் செய்கின்ற இந்த வியாபாரம் பற்றி போலீசுக்கா தெரியாது. தெரியும் ஆனால் மேலிடம் விடவில்லையே சோதனை செய்ய? சரி தானாக வந்து சேருகின்ற கமிஷன் கிடைத்தவரை லாபம் என்று போலீசும் அதில் ஐக்கியமாகிவிட்டனர் போலும். காவல்துறையும் போலீசுக்கே உண்மையான செய்தியை சொல்லாமல் கூட்டி சென்றுள்ளார்கள் என்றால் இதைவிட கேவலம் உலகில் ஏதுமுண்டோ சொல்லுங்கள். அப்போ கஞ்சா வியாபாரிகளும் போலீசும் எந்த அளவுக்கு கூட்டணி பிசினஸ் செய்துவருகின்றனர் என்று பாருங்கள். முன்னமே சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு கூட கிடைத்திருக்காது.. கருணாநிதி ஒருமுறை சொன்னார் போலீசின் ஈரல் கெட்டுவிட்டது என்று. இப்போ அவர் மகன்...போலீசின் உடல் முழுக்க லஞ்சம் எனும் நோயால் சிக்கி சீரழிந்துவிட்டது. காரணம் கட்சிக்காரர்களை தொந்தரவு செய்ய கூடாது என்கிற ஆளும் தரப்பின் அதிரடி உத்தரவே காரணம். போ...போ ...போதையில் தல்லாஆஆடுது தமிழகம் என்று கடந்த ஆண்டே எழுதியிருந்தேன்


Kasimani Baskaran
செப் 01, 2024 05:58

தாபாவில் விற்பதை டாஸ்மாக்கில் விற்றால் என்ன குடியா முழுகிப்போய்விடும் - இஞ்ஞனம் உடன் பிறப்புக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை