உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறார் குற்றங்களை தடுக்க போலீசில் குழு

சிறார் குற்றங்களை தடுக்க போலீசில் குழு

சென்னை:சிறார் குற்றங்களை தடுக்க, காவல் நிலையங்கள் தோறும், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் நல்வழிப்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சைக்கிள் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் சிறார்கள் அதிகரித்து வருகின்றனர். பள்ளி இடைநிற்றல், வசிப்பிட சூழல் உள்ளிட்ட காரணங்களால் குற்றச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுபோன்ற சிறார்கள், ரவுடிகளிடம் சிக்கி சீரழிந்தும் வருகின்றனர். கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கும் அடிமையாகி விடுகின்றனர். இதுபோன்ற சிறார்களை அடையாளம் காணும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சிறார் குற்றங்களை தடுக்க, காவல் நிலையங்கள் தோறும், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் நல்வழிப்படுத்துதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி