உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன் ராதாகிருஷ்ணன் ஓட்டு குறைந்தது; கன்னியாகுமரியில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்

பொன் ராதாகிருஷ்ணன் ஓட்டு குறைந்தது; கன்னியாகுமரியில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம்

நாகர்கோவில : கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் விஜய் வசந்த் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019-ல் வெற்றி பெற்ற வசந்தகுமார்(காங்.,) காலமானதை தொடர்ந்து 2021 இடைத்தேர்தலில் விஜய் வசந்த் ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 37 ஓட்டுகள் பெற்றிருந்தார். இந்த தேர்தலில் அவருக்கு 30,000 ஓட்டுகள் குறைந்துள்ளது. இதுபோல அ.தி.மு.க. கூட்டணியுடன் 2021-ல் நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 87 ஓட்டுகள் பெற்ற பொன் ராதாகிருஷ்ணன் தற்போது 91 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார். இங்கு நான்கு முனை போட்டி நிலவினாலும் காங்., மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவியது. 15, 816 தபால் ஓட்டுகள் உட்பட 10 லட்சத்து 32 ஆயிரத்து 657 ஓட்டுகள் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajeev Murugan
ஜூன் 05, 2024 20:54

எத்தனையோ மினாரிட்டி வேட்பாளர்களை நிறுத்திய பிஜேபி, ஒரு கிறிஸ்தவ வேட்பாளரை இங்கு நிறுத்தலாமே.


jeyakumar
ஜூன் 05, 2024 18:49

வரும் காலங்களில் இந்த மாவட்டத்திற்கு தேர்தல் தேவை இல்லை, அனைத்தும் மைனாரிட்டி, மைனாரிட்டி...


s vinayak
ஜூன் 05, 2024 14:18

எத்தனை முறைதான் இவருக்கே போட்டியிட வாய்ப்பளிக்கும் பாஜக.


PRABA
ஜூன் 05, 2024 12:19

டோன்ட் ஒர்ரி. திஸ் ஐஸ் ஆரம்பம் .போக போக வெட்டரி உந்தகும்


Apposthalan samlin
ஜூன் 05, 2024 11:51

கன்னியாகுமரி பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வாழும் பகுதி அங்கெ போய் கிறிஸ்தவர்கள் ஓட அடிக்க படுவீர்கள் கலகம் உண்டாகும் என்று பேசினால் எவன் வோட் போடுவான் அதான் ஊத்திக்கிச்சி


Charles G
ஜூன் 05, 2024 12:40

ஹாஹாஹா ஹாஹாஹா


Sampath Kumar
ஜூன் 05, 2024 08:44

இந்த நம்மது போன பொறி உருண்டையை யாரும் சீந்த வில்லை பற்றாக்குறைக்கு இந்த ஜி வந்து கன்யாகுமரில் சீன போட்டாரு புட்டுக்கிச்சு


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி