உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2hdxeig3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர். உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். பின்னர் கரும்புகளை சுவைத்து, பொங்கல் விளையாட்டுகளை விளையாடி உற்சாகம் அடைந்தனர். நகரப் பகுதிகளில் குடியிருப்போர் சங்கங்களிலும், கிராமங்களில் ஊர் பொது இடங்களிலும் பொங்கல் முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழன்
ஜன 14, 2025 16:25

பொங்கலாம் பொங்கல்.. ஆயிரம் பரிசு தொகையும் இல்லை அரையில் கட்ட வேட்டி சேலையும் இல்லை சமத்துவ பொங்கல் என சமர்த்தாக பேசும் முதல்வர்.. அன்பாக தந்த பொங்கல் பரிசில் அரிசியும் சர்க்கரையும் வைத்து என்ன செய்ய ? சர்க்கரை பொங்கல் என சொல்வதால் சர்க்கரை தந்து வெல்லம் இல்லை என்றாரா? வெள்ளம் வந்ததே என பயந்து வெல்லம் இல்லை என்றாரா? எடுத்து காட்ட ஏலமும் முந்திரியும் கூட இந்த பொங்கலுக்கு இல்லையே இனி எப்படி என பொங்கி வரும் மக்களுக்கு . பொங்கல் வாழ்த்து சொல்ல தடுமாறுகிறது நாக்கு . தயக்கமாக தான் இருக்கு.


angbu ganesh
ஜன 14, 2025 11:43

12 ல இருந்து ஒரு மணிக்குள்ளேதான் பொங்கல் பொங்கனும் சரியா இதுக்குள்ளேயேவா


தியாகு
ஜன 14, 2025 11:08

பெண்களே தாங்கள் சமைத்த பொங்கலை வீட்டிற்கு பத்திரமாக எடுத்து செல்லவும். இல்லனா கட்டுமர திருட்டு திமுகவின் அல்லக்கைகள் பானையுடன் பொங்கலை ஆட்டையை போட்டு வயிறுமுட்ட தின்று விடுவார்கள்.


Ram pollachi
ஜன 14, 2025 10:09

வாசக நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!!


Svs Yaadum oore
ஜன 14, 2025 09:27

விடியல் நேற்றே பொங்கல் பானை வைத்து போட்டோவுக்கு போஸ் குடுத்து பொங்கல் கொண்டாடும் பாயம்மாவுக்கும் மேரியம்மவுக்கும் மத சார்பின்மையாக வாழ்த்து சொல்லிட்டாரு .....பனையூரான் நேற்றே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டான் ....சென்ற வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பனையூரான் அடுத்த ஆறே மாதத்தில் இனொரு புத்தாண்டு வாழ்த்து மத சார்பின்மையாக அறிவித்து விட்டான் ...


பெரிய ராசு
ஜன 14, 2025 13:30

முட்டாள்கள் பொங்கல் இந்துக்கள் பண்டிகை சூர்யதேவனுக்கு நன்றி சொல்ல விவசாயின் பண்டிகை , அதைவிடுத்து சமத்துவப்பொங்கல் சொல்லிட்டு திரிய வேண்டியதுதான் , விடியமுஞ்சி ஒரு தத்தி அறிவுகிடையாது மற்றவர்கள் சிந்திக்கவும்