உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாடிகார்டு உடன் தொழுகையா? விஜய்க்கு தி.மு.க., நடிகர் கண்டனம்

பாடிகார்டு உடன் தொழுகையா? விஜய்க்கு தி.மு.க., நடிகர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரமலான் நோன்பை வெள்ளிக்கிழமை படம் போல் அவசரமாக செய்துள்ளார், த.வெ.க., தலைவர் விஜய்' என, தி.மு.க., சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவரும், நடிகருமான ஜெ.எம்.பஷீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:இஸ்லாமியர்களின் புனித நோன்பு நிகழ்ச்சியை, தன் அரசியல் சுயநலத்திற்காக, வெள்ளிக்கிழமை 'ரிலீஸ்' படம் போல் அவசரமாக, த.வெ.க., தலைவர் விஜய் செய்துள்ளார். கை, கால்களை சுத்தம் செய்து விட்டுதான் தொழுகையில் ஈடுபடுவது மரபு. அவ்வேளையில், ஏழை, பணக்காரன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், சமமாக தோளோடு தோள் நின்று தொழுவதே வழக்கம். ஆனால், விஜய் தொழும்போது கூட, பவுன்சர்கள் என அழைக்கப்படும் 'பாடிகார்டு'களை உடன் வைத்துள்ளார். அப்படி தொழுகை நடத்திய முதல் அரசியல் தலைவராகியுள்ளார். ஒரு நாட்டின் அதிபர் கூட, இவ்வாறு பாதுகாவலர்களை பின்னால் நிற்க வைத்துவிட்டு தொழுததாக வரலாறு இல்லை. நோன்புக்காக வந்தவர்களை வெளியே நிற்க வைத்து, சட்டைகளை கிழித்தும், அடித்தும் துரத்தியுள்ளனர். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அரசியல் செய்ய எண்ண வேண்டாம். நோன்பு வைத்தவர்களை மட்டும் தானே அழைத்தீர்கள்; அழைப்பிதழ் இல்லாதவர்களை எப்படி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்த அரங்கத்துக்குள் அனுமதித்தீர்கள்?நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு கேரவனில் வந்த முதல் நபரும் விஜயாகத்தான் இருப்பார். எல்லாமே சினிமா பாணியில் இருக்கிறதே! விஜய் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivagiri
மார் 11, 2025 14:22

பௌன்சர்களுடன் இறைவனை வணங்குபவன், ஒரு நாள் எல்லாம் போன பின்னே, உண்மையாக வணங்க கூட முடியாமல் போகலாம் ,


vbs manian
மார் 09, 2025 09:55

உள்ளத்தில் தூய உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத எல்லாம் வேடமே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 07:44

எப்பவாவது அவர் தன்னை அரசியல் வாதி அப்படின்னு சொல்லிக்கொண்டாரா. நீங்களே கற்பனை செய்துட்டா அவர் என்ன பண்ணுவார். அவரே பாவம் கட்டாயப்படுத்தி சினிமா அரசியலே கதாநாயகனாக திமுக சினிமா கம்பெனி கூட ஒப்பந்தம் போட்டுட்டு வந்து நடிச்சுட்டு இருக்காரு. இந்த படம் முழுக்க முடிய இன்னும் ஐந்து வருஷம் ஆகும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க மாட்டீங்களா. விஜய் டிவியிலே பிக் பாஸ் மாதிரி ஜீ டிவியிலே ஒரு புராஜெக்ட் ரெடி ஆயிட்டு இருக்கு. அதுல இவரை போடலாம்னு யோசிச்சுட்டு இருக்காங்க. அப்புறம் உங்க பக்கமே வர மாட்டாரு அப்படியே வந்தாலும் மசூதி பக்கம் வந்தா முஸ்லிம் ஆயிடுவாரு சர்ச் போனா பாதிரியார் ஆனாலும் ஆயிடுவாரு கோயில் அப்படின்னா அது இந்து கோயில் தாங்க அங்க பக்கத்துலே போனா பூனூல் மாட்டி பூசாரி ஆயிடுவாரு. இதெல்லாம் சினிமாவுல தான் வரன்னுமா நேரிலே நடக்க கூடாதா. என்ன புரோ நீங்க போங்க புரோ ரொம்ப அவசரப்படறீங்க. ஆமாம் புரோ இந்த மாதிரி மாதிரி பவுன்சர்களோடு வந்து தொழுகை நடத்தி அதை வெளியே சொல்லி எதிர்ப்பு தெரிவிக்கற மாதிரி எல்லா பத்திரிகை டிவி காட்டி பப்ளிசிட்டி பப்ளிசிட்டி முக்கியம் அப்படின்னு திரை கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தது யாரு புரோ.


kumar
மார் 09, 2025 05:25

வயித்தெரிச்சல்


கண்ணன்,மேலூர்
மார் 09, 2025 06:47

அரசியலில் இவரது நடிப்பு எடுபடாது கடைசியில் அசிங்கப் பட்டுதான் அரசியலில் இருந்து ஒதுங்குவார்.