உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லா செலவும் போக மாதம் ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கிறது!

எல்லா செலவும் போக மாதம் ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கிறது!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள, தேவந்தவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும், ஸ்ரீ கோகுல கிருஷ்ண கோசாலையை நடத்தி வரும் ஸ்ரீவித்யா: நானும், என் கணவரும் தான் இதை நடத்தி வருகிறோம். இருவருமே பி.பார்ம்., முடித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் அதிகம். 2007ல் இந்த கோசாலையை துவங்கினோம்.இது எங்கள் சொந்த நிலம். வெட்டுக்கு போற மாடுகளையும், நல்ல நிலையில் உள்ள மாடுகளையும் வாங்கி வளர்த்து வருகிறோம்.ஆரம்பத்தில், நான்கு மாடுகளுடன் துவங்கப்பட்ட இந்த கோசாலையில், தற்போது 1,146 மாடுகள் உள்ளன. நாங்களே பசுந்தீவனம் சாகுபடி செய்கிறோம். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் நாட்டு மருந்துகள் தான் பயன்படுத்துகிறோம். முதலில் திருநீறும், சாம்பிராணியும் தயார் செய்து விற்பனை செய்து வந்தோம். பின் நாக்பூர், பெங்களூரு, கேரளா உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, மதிப்பு கூட்டல் தொடர்பாக நிறைய பயிற்சிகள் எடுத்து வந்தோம். அதன்பின், 2016ல் மதிப்பு கூட்டல் தொழிற்சாலையை துவங்கினோம்.பற்பொடி, ஊதுபத்தி, ஷாம்பூ, பாத்திரம் தேய்க்கும் பொடி, சானிடைசர் உட்பட, 40 வகையான பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். சாண விளக்கு, சாம்பிராணி, ஊதுபத்தி, வறட்டி உள்ளிட்ட பொருட்கள் செய்ய மிஷின்கள் வைத்துள்ளோம். எங்கள் தயாரிப்புகளில் மிக ஸ்பெஷலாக உள்ளவை விநாயகர் சிலை, விறகு கட்டை, வீடு கட்டும் கல். இந்தப் பொருட்களுக்கு இந்தியா முழுக்க பல பகுதிகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.'சாணத்தில் தயார் செய்யப்படும் கல்லை பயன்படுத்தி வீடு கட்டினால், அது தரமாக இருக்குமா? மழை பெய்தால், கல் ஊறிடு மோ' என்ற சந்தேகம் பலருக்கும் எழும்.அதுமாதிரியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சாணக்கல் பயன்படுத்தி ஒரு வீடும், மாட்டுக் கொட்டகையும் கட்டியிருக்கோம். அதிக மழை பெய்த நேரங்களில் கூட, சிறு பாதிப்புகள் கூட ஏற்படவில்லை. தற்போது, மாடுகளை பராமரிக்க 41 பேரும், மதிப்பு கூட்டல் தொழிற்சாலையில், 12 பேரும் பணிபுரிகின்றனர். நாட்டின மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட சிலர், நன்கொடைகள் கொடுக்கின்றனர். ஆனால், அதை மட்டும் சார்ந்திருந்தால், இவ்வளவு பெரிய கோசாலையை வெற்றிகரமாக நடத்த முடியாது.எங்களது தயாரிப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக மிக எளிதாக விற்பனை செய்கிறோம். மாதத்திற்கு எல்லா செலவுகளும் போக, 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. வரும் காலங்களில் இது பல மடங்காக பெருகணும் என்பது தான் எங்கள் லட்சியம். தொடர்புக்கு:98433 16206.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 25, 2024 11:00

இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கை ........


Rengaswamy S
ஜூலை 14, 2024 14:25

மங்கலானி பவந்து


Ravichandran S
ஜூலை 14, 2024 12:42

நல்ல பணி கடவுள் உங்களுக்கு நன்மை புரிவாராக


Senthoora
ஜூலை 14, 2024 08:07

பாராட்டுக்கள். விஷமிகளிடமும், வருமானத்துறையிடமும் இருந்து அவதானமாக செயல்படுங்க.


xyzabc
ஜூலை 14, 2024 05:32

Well done


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை