உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது அதிகார ஆவண பதிவு கட்டணம் அதிரடி உயர்வு

பொது அதிகார ஆவண பதிவு கட்டணம் அதிரடி உயர்வு

சென்னை: சொத்து விற்பனையில், பொது அதிகார ஆவண பதிவு கட்டண உயர்வுக்கானஅரசிதழ் அறிவிப்பை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.வீடு, மனை விற்பனை, நிறுவனங்கள் பதிவு தொடர்பான ஆவணங்களின் பதிவு கட்டணங்களை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், பெரும்பாலான இனங்களில், 20 ரூபாய், 50 ரூபாய் என்று இருக்கும் கட்டணங்கள், 1,000 ரூபாயாக மாற்றி அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது. இதற்கான மசோதா, 2023ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.இதன்படி, தத்தெடுத்தல் பத்திரத்துக்கான கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரமாண பத்திரம் பதிவு செய்ய, 20 ரூபாய் கட்டணம், 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஒப்பந்தம் பதிவு கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாகவும், நிறுவன பதிவு கட்டணம், 300 ரூபாயில் இருந்தது; தற்போது, 10 லட்சம் ரூபாய்க்கு, 500 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது.ரத்து ஆவண பதிவு கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், வெளியார் பெயரில் பதிவு செய்யப்படும் பொது அதிகார ஆவணத்துக்கான கட்டணம், அந்த சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், குடும்ப உறுப்பினர்களுக்கான பொது அதிகார பதிவு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.இது தொடர்பான அரசாணையை, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Nagarajan D
மே 08, 2024 12:11

எல்லா கட்டணங்களும் ஏற்றப்பட்டுவிட்டது இது தான் விடியல் ஆட்சி


Muguntharajan
மே 08, 2024 09:41

இது ஒன்றும் அதிரடி உயர்வு அல்ல மிகவும் காலம் தாழ்ந்த உயர்வு இது பத்து வருடங்களுக்கு முன்பே உயர்த்தி இருக்க வேண்டும் மேலும் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் புழங்குகிறது மார்க்கெட் மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு பாதியளவுக்கு குறைவாக இருப்பது தான் இதற்கு காரணம் விற்பனை மதிப்பில் பாதியளவுக்கு தான் முத்திரை தாள் வாங்கி பதிகிறார்கள் மீதி பாதியை கணக்கில் வராமல் கருப்பு பணமாக கொடுத்து கிரையம் செய்கிறார்கள் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வழிகாட்டி மதிப்பை மார்க்கெட் மதிப்பிற்கு உயர்த்த வேண்டும் ஆனால் முத்திரை தாள் கட்டணம் உயராமல் அதன் சதவீதத்தை குறைக்க வேண்டும் உதாரணமாக % என்பதை % என்று குறைத்து மொத்த பதிவுக் கட்டணம் உயராமல் செய்ய வேண்டும் இதனால் ரியல் எஸ்டேட் விற்பனையில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்கலாம் இது குறித்து உங்கள் நாளிதழில் செய்தி வெளியிட்டு அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் நன்றி


ponssasi
மே 08, 2024 15:04

இந்த துறையில் கருப்புப்பணத்தை ஒழித்து நியாயமான விலையில் மனைப்பிரிவு வீடு விற்பனை செய்யப்படவேண்டுமெனில், விற்கும் சொத்தை அரசே வாங்கிக்கொள்ளவேண்டும் வீடு வாங்குபவர் அரசிடம் இருந்து நேரடியாக சொத்தை வாங்கிக்கொள்ளவேண்டும் இதில் மோசடி, ஏமாற்றுதல் கறுப்புப்பணம் தடுக்கப்படும்


மணியன்
மே 08, 2024 09:35

மக்களே அதிகாரபூர்வ கட்டணம் மட்டும் வசூலித்தால் அரசுக்கு நம்மால் ஒரு வருவாய் என்று கூட திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால் சண்டாளர்கள் பிடுங்கும் லஞ்சம் அதிகாரபூர்வ கட்டணத்தை விட மூன்று முதல் பத்து மடங்காக உள்ளது. நடுத்தர வர்க்கம் லஞ்சத்தால் குரல்வளை நெரிபட்டு நிற்கிறது. லஞ்சம் வாங்கும் அனைவரும் நாசமாக, நிர்மூலமாக போகட்டும். இதுதான் இன்று சாமானியன் நிலைமை.


ஆரூர் ரங்
மே 08, 2024 09:28

பொது அதிகாரம் இங்கு எடுபடாது. ஒரே குடும்ப அதிகாரக் கொள்ளைக்கு மட்டுமே அனுமதி.


sethu
மே 08, 2024 09:28

சாராயம் மற்றும் பெட்ரோல் டீசல் ஜி எஸ் டி க்குள் கொண்டு வரவேண்டும் பத்திரப்பதிவையம் கல்வியையும், மருத்துவத்தையும், போலீசையும் மத்திய அரசின் கட்டுக்குள் கொண்டு வரணும்


sethu
மே 08, 2024 09:24

ஒருபுறம் கனிம வளம் கொள்ளை, மறுபுறம் டாஸ்மாக் மூடாமல் அதை வைத்து கொள்ளை இலவச கல்விக்கு தடை, இலவச மருத்துவத்திற்கு தடை, மத்திய அரசின் வளர்ச்சிப்பணிக்கு தடை, தமிழனை கெடுத்தவனுக்கு பல கோடிகளில் சிலை, இந்து கோயில்களின் சொத்துக்கள் கொள்ளை, ஹிந்து கோயில் பிஸேட் டெபாசிட் பல ஆயிரம் கோடிகள் கொள்ளை, மணல் கொள்ளை, கருங்கல் கொள்ளை, செம்மண் கொள்ளை கஞ்சா விற்பனை, சாராயம் விற்பனை, போதைப்பொருள் விற்பனை, வழிப்பறி, திருட்டு, வீடு புகுந்து கொலை, நள்ளிரவு வீடுகளில் கொள்ளை, பூட்டை உடைத்து பகலில் கொள்ளை, இரு சக்கரம் வாகனம் முதல் டிப்பர் லாரிவரை திருட்டு கொள்ளை, ஆள்கடத்தல் கொலை என்ன இது தமிழ்நாடா அல்லது சோமாலியாவா , இதுதான் விடியல் ஆட்சியா


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 08, 2024 08:41

எலெக்ஷன் முடிஞ்சிது இல்ல அதான் விலையேற்றம் ஒட்டு போட்ட கேணைகள் எல்லாம் வந்து ஒரு ஓ போடுங்க


GMM
மே 08, 2024 07:52

நில விலை உயர்வுக்கு மத்திய அரசின் அபிவிருத்தி பணிகளும் காரணம் ரயில், பாலம், விமானம், துறைமுகம் பத்திர பதிவு வருவாயில் மத்திய அரசு அதிக பங்கு பெற வேண்டும் இது போல் டாஸ்மாக் விற்பனை மருத்துவ செலவுகளை அதிகரிக்கும் இதிலும் மத்திய அரசு தன் பங்கை பெற வேண்டும் மாநிலங்கள் நிர்வாக தேவைக்கு அதிகமாக வசூல் செய்து, ஊழலில் ஊறிவிட்டன


jayvee
மே 08, 2024 07:09

அதிகாரிகளால் மட்டுமே நடத்தப்படும் அரசு இது


sethu
மே 08, 2024 09:38

இந்த அரசு நீரோ மன்னரால் நடக்கிறது மாமன்னர் கேட்கிறார் மாதம் மும்முறை மழை பொழிகிறதா மந்திரி நேரு அவர்களே ஆம் மன்னா அப்போ சரி, உச்சி பிள்ளையார்கோயில் இப்போது உங்கள் கைவசம் வந்துவிட்டதா அல்லது இன்னும் நமது எதிரி பொதுமக்கள்தான் அதை வைத்து பயன் அடைகிறார்களா? அதை தவிர்த்து மற்றவை அனைத்தும் எனது வசம் வந்துவிட்டது மன்னா தாங்கள் மனது வைத்தால் உச்சி பிள்ளையார் கோயில் மட்டும் அல்ல ஸ்ரீரங்கம் கோபுரத்தையும் எனது பராக்கிரமத்தில் நான் எடுத்து விடுவேன் மன்னா தங்கள் சித்தம் இந்த அடிமை உங்கள் கண் அசைவுக்காக காத்திருக்கிறேன் மன்னா


2020capital holdings
மே 08, 2024 07:08

இந்த அரசு ஒன்றையும் விட்டு வைக்க வில்லை மக்கள் வேதனை கூடி இருக்கிறது


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ