உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுக்கோட்டை, தி.மலை, காரைக்குடி, நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு

புதுக்கோட்டை, தி.மலை, காரைக்குடி, நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி, நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில் 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, மூன்று லட்சத்திற்கு குறையாத மக்கள் தொகை; 30 கோடி ரூபாய்க்கு குறையாத ஆண்டு வருமானம் உள்ள நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முடியும்.அதற்கு குறைவான மக்கள் தொகை மற்றும் வருமானம் கொண்ட பல மாவட்ட தலைமையிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள், ஆன்மிக சுற்றுலா நகரங்களில் திட மற்றும் நீர்மக் கழிவுகளை வெளியேற்றும் வசதி உட்பட, ஒரு மேம்பாட்டு உள்கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது.எனவே, அத்தகைய உள்ளாட்சியை தேவைக்கேற்ப பேரூராட்சியாக, நகராட்சியாக, மாநகராட்சியாக அறிவிப்பது அவசியம். இதற்கு ஏற்கனவே உள்ள மக்கள் தொகை, வருமான அளவுகோல் தடையாக உள்ளது.எனவே, அந்த விதிமுறைகளில் திருத்தம் செய்து, தேவையான நகரங்களை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்துவதற்காக, 2024ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டத்தை, அமைச்சர் கே.என்.நேரு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.இந்த சட்ட மசோதாவின்படி, மூன்று லட்சம் மக்கள் தொகை, இரண்டு லட்சமாக, 30 கோடி ரூபாய் வருமானம், 20 கோடி ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.மேலும், தேவைக்கேற்ப எந்த உள்ளாட்சி பகுதியையும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியாக உருவாக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.புதிய சட்ட திருத்தத்தின்படி, புதுக்கோட்டை நகராட்சியுடன், 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும்; திருவண்ணாமலை நகராட்சியுடன், 18 ஊராட்சிகளை இணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாகவும் மாற்றப்படும்.மேலும், நாமக்கல் நகராட்சியுடன், 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியாகவும்; காரைக்குடி நகராட்சியுடன் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும் உருவாக்கப்பட உள்ளது.இதன் வாயிலாக, மாநகராட்சிகள் எண்ணிக்கை 25 ஆக உயரும். அதேபோல் 2024ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டாம் திருத்த சட்ட மசோதாவை, அமைச்சர் நேரு தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டத்தின்படி, நகராட்சி என்ற சொற்றொடர், நகராட்சி மன்றம் என இனி மாற்றி அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ديفيد رافائيل
ஜூன் 29, 2024 11:25

நான் நினைச்சுட்டே இருந்தேன் three years இன்னும் DMK ஆட்சிக்கு வந்து தன் பங்கு க்கு நகராட்சியை மாநகராட்சியாக்கலேன்னு. Today news பாத்துட்டேன் ????


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 10:27

அடுத்து வேங்கைவயல் மாநகராட்சியாக்கப்பட்டு ஸ்பெஷல் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்படும்.


அப்புசாமி
ஜூன் 29, 2024 09:28

சென்னை, மதுரை ரேஞ்சுக்கு நாறப்போகும் புதிய நகரங்கள்.


ManiK
ஜூன் 29, 2024 09:05

மாநகராட்சி means மாபெரும் Tax collection and ஆளும் கட்சி ஆளூங்க அட்டகாசம்... மத்தபடி பொதுமக்களுக்கு nothing.


Svs Yaadum oore
ஜூன் 29, 2024 07:18

இந்த சட்டத்தை மேலும் திருத்தி , ஒரு லட்சம் மக்கள் தொகை, ஒரு கோடி ரூபாய் வருமானம் உள்ள ஊர்களை மாநகராட்சியாக அறிவிக்க வகை செய்ய வேண்டும் ..... பிறகு பண்ருட்டி மேயர் , விருதாச்சலம் மேயர் , சின்ன சேலம் மேயர் , பெருந்துறை மேயர் என்று அரசியல்வாதிகள் குளிர் பதனம் செய்யப்பட்ட காரில் உலா வரலாம் ...


Svs Yaadum oore
ஜூன் 29, 2024 07:10

மாநகராட்சிகள் எண்ணிக்கை 25 ஆக உயருமாம் ......தமிழ் நாட்டில் 25 மாநகராட்சியாம் .....இதுக்கு மாநகராட்சி அலுவலகம் , மேயர் ,கமிசனர் , கார் , பங்களா என்று அரசு ஊழியர் அரசியல்வாதிகள் அனுபவிக்கலாம் ..... மக்கள் மட்டும் எப்போதும் அதே சாக்கடை , குண்டும் குழியுமாக ரோடு , கொசுக்கடி என்று வாழலாம் ....


Kasimani Baskaran
ஜூன் 29, 2024 07:09

தி மலையென்றால் அது எதோ கிருஸ்தவ மலை என்று எண்ணிவிட வேண்டாம். விடியல் ஆட்சி இது போல இந்துப்பெயர்கள் எங்கெல்லாம் வருமோ அங்கெல்லாம் இது போன்ற லீலைகளை செய்து அதை பெயர் மாறியது போல ஆகிவிடுவார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை