உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசைப்படகுகளுக்கு கியூ.ஆர்., கோடு: மீன்வளத்துறை புதிய நடவடிக்கை

விசைப்படகுகளுக்கு கியூ.ஆர்., கோடு: மீன்வளத்துறை புதிய நடவடிக்கை

ராமநாதபுரம் : ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு கியூ. ஆர்.கோடு வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலமான தற்போது படகுகள் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தடைக்காலம் ஜூன் 15 ல் நிறைவடைகிறது. தடைக்காலத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்வது வழக்கம்.இந்த ஆண்டு துணை இயக்குநர் பிரபாவதி தலைமையில் துணை இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி முன்னிலையில்ஆய்வு நடந்தது. மேலும் இந்த ஆண்டு படகுகளுக்கு கியூ.ஆர்.கோடு வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1400 விசைப்படகுகள் உள்ளன. இதில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் உள்ள 650 படகுகளுக்கு சோதனை அடிப்படையில் கியூ.ஆர்.கோடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த படகின் பதிவு எண்ணை வேறு படகுகளுக்கு பயன்படுத்த முடியாது. கடந்த காலங்களில் கடத்தலில் இலங்கையில் பிடிபட்ட படகின் பதிவெண்ணை இங்கு வேறு படகுக்கு பயன்படுத்தும் நிலை இருந்தது. கியூ.ஆர்.கோடு வழங்குவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.இந்த கியூ.ஆர்.கோடை படகில் இருந்து அப்புறப்படுத்த முடியாது. அப்படி அப்புறப்படுத்தினால் சேதமடைந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ