உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-11 பெண் குழந்தைகளை ஆதரிப்போம்

ரம்ஜான் சிந்தனைகள்-11 பெண் குழந்தைகளை ஆதரிப்போம்

நபிகள் நாயகத்தின் மனைவியான ஆயிஷா (ரலி) சொல்கிறார்: இரண்டு பெண் குழந்தைகளுடன் ஒரு பெண் உதவி கேட்க வந்தாள். அந்த நேரத்தில் வீட்டில் ஒரு பேரீச்சம் பழத்தை தவிர சாப்பிட எதுவுமில்லை. அதை அவளுக்கு கொடுத்தபோது பழத்தை பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டாள். அவளின் முகத்தில் பசியின் அறிகுறி தெரிந்தாலும் எதுவுமே சாப்பிடவில்லை. இதை வீட்டிற்கு வந்த அண்ணலாரிடம் சொன்னேன். அதற்கு அவர், 'ஒருவர் தன் பெண் குழந்தைகளின் மூலமாக சோதனையில் ஆழ்த்தப்படுகிறார். அப்போதும் அவர் குழந்தைகளிடம் நல்ல முறையில் நடந்து கொண்டால் நரகத்தில் இருந்து தப்பலாம்' என்றார். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்