ரம்ஜான் சிந்தனைகள்-13
கண்ணாடி போன்றவன்அபூஜகீல் என்பவர் நபிகள் நாயகத்திடம், ''உங்கள் முகம் பார்க்கவே அருவருப்பாக உள்ளது. நீங்கள் லட்சணமாக இல்லை'' என்றார். இதற்கு கோபப்படாமல் சிரித்தாவாறே, ''நீங்கள் சொல்வது உண்மைதான்'' என கூறினார். அந்த சமயத்தில் தோழரான அபூபக்கர் அங்கு வந்தார். நாயகத்திடம், ''உங்கள் முகம் மாசு மருவில்லாத முழு நிலாவாக பிரகாசிக்கிறது. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்'' என்றார். அதற்கு சிரித்தவாறு, ''ஆம்'' என பதிலளித்தார். அப்போது அங்கு நின்று இருந்தவர்கள், ''உங்களை அவதுாறாக பேசியவருக்கும், புகழ்ந்து பேசியவருக்கும் ஒரே மாதிரியான பதிலை தந்தீர்கள். இருவரும் கேள்வி கேட்ட போதும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னீர்களே எப்படி'' எனக் கேட்டனர். ''நான் கண்ணாடி போன்றவன். அபூஜகீல் தனது முகத்தை எனக்குள் பார்த்தார். அது அவலட்சணம் போல தெரிந்தது. அபூபக்கர் தனது முகத்தை என்னில் பார்த்தார். அது முழுநிலா போல காட்சி தந்தது'' என்றார்.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி