உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-14

ரம்ஜான் சிந்தனைகள்-14

நோயாளிகள் கவனிக்க...

நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். உடல் அசதியாக உள்ளது. என்னால் தொழ முடியாது என சொல்வதை முடிந்தளவு தவிருங்கள். அது போல் நோயாளியைப் பார்க்க சென்றாலும் அவரிடம் தொழுகை செய்யும்படி அறிவுறுத்துங்கள். * நோய்க்கு பரிகாரம் தேடுங்கள். இறைவன் மருந்தை படைத்து தயாராக வைத்துள்ளான்.* நோய் என்பது அவனின் சோதனையாகும். அதைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப் படுத்துகிறான்.* ஒருவர் நோயாளியாகி விடுகிறார். அப்போது நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு ஒரு கட்டளை வரும். 'இவன் முன்பு சுகமாக இருக்கும்போது செய்த நற்செயல்களின் நன்மைகள் இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கட்டும்' என்பதே அது. * எவரேனும் ஒருவர் நோயாளியை சந்திக்கச் சென்றால், வானத்தில் இருந்து ஒரு அழைப்பாளர் குரல் கொடுப்பார். 'நீங்கள் நல்லவர். உமது நடையும் நல்லது. நீங்கள் சொர்க்கபதியில் ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்' என சொல்வார். * மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !