உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி., ரத்து

18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி., ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள், பைக், கார் உள்ளிட்ட வாகனம் ஓட்டினால், ஜூன் 1 முதல், ஆர்.சி., ரத்து செய்யப்படும்' என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் புதிய அம்சங்களை சேர்த்து, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. சாலை விபத்துக்களை குறைப்பதோடு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துதல், விதிமீறலுக்கு அபராதம் அதிகரிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.அதன்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும் என, மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுனர் உரிம விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும், ஒன்பது லட்சம் பழைய அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும். அதிவேகத்துக்கான அபராதம், 1,000 முதல் 2,000 ரூபாய் வரை இருக்கும்.அதேநேரம், 18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர் ஓட்டி வந்த வாகனத்தின் ஆர்.சி., எனப்படும், பதிவுச்சான்று ரத்து செய்யப்படும். 25 வயது வரை, அவருக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திலும் போக்குவரத்து புதிய சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். இருப்பினும், இந்த புது உத்தரவு குறித்து, தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

seshadri
மே 30, 2024 11:09

எவ்வளவுக்கு எவ்வளவு சட்டங்கள் kadumai ஆகிறதோ அவ்வளவும் காவல் துறைக்கு லாபம். இதை வைத்து அதிகம் லஞ்சம் vaangalaam.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 30, 2024 10:52

எண்ணற்ற ஏட்டளவு சட்டங்களில் இதுவும் ஒன்று. ஹெல்மெட் க்கு ஆயிரம் அபராதம் என்று சொன்னார்கள். போக்குவரத்து காவலர் முன்நிலையிலேயே ஆயிரக்கணக்கானோர் தலைக்கவசம் இன்றி போகின்றனர். இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேர் போகும் காட்சி அன்றாடம் கிடைப்பதுதான். அதுபோல எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பத்து பன்னிரண்டு வயது சிறார்கள் இரு சக்கர வாகனங்களில் அன்றாடம் நகரை சுற்றி வருகின்றனர். ஒரு முறை கூட காவல் துறை நிறுத்தி விசாரித்தது கூட இல்லை.


ஆரூர் ரங்
மே 30, 2024 10:49

வண்டி உற்பத்தியாளர்கள் தருகின்ற மாமூல்? இந்த ஆட்டோமொபைல் லாபியின் அழுத்தம் காரணமாகவே போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்துவது கிடையாது. அரசு பஸ் போன்ற பொதுப் போக்குவரத்தை வேண்டுமென்றே சாகடிக்கிறார்கள். பெட்ரோல் விலையைக் குறைக்க போராட்டம் நடத்தும் பின்னணியிலும் இந்த லாபி ஆட்கள்தான் உள்ளனர். பெரும்பாலான ஊர்களில் பார்க்கிங் தட்டுப்பாட்டால் சாலைகள் ஆக்கிரமிப்பு. நாட்டிலேயே இங்குதான் அதிகபட்ச விபத்துக்கள். ஐநூறுக்கு ஓட்டை விற்கும் மக்கள் தேசத்தின் எதிரிகள்.


PalaniKuppuswamy
மே 30, 2024 08:25

இது சும்மா சும்மா காட்டியும் சுஜூபி.. யார் வண்டி ஓட்டினாலும் கண்டுக்க மாட்டோம். டாஸ்மாக் வாடிக்கையாளர் மது போதையில் வண்டி ஓடினால் இது மாதிரி RC ரத்து செய்யப்படும் என்று அரசு அறிக்கையும் நடவடிக்கையும் எடுக்குமா? எதனை உயிர்கள் போகின்றன


S.kausalya
மே 30, 2024 06:57

இவர்களால் சாலை விபத்து ஏற்படின், வாழ் நாள் முழுவதும் வண்டி ஓட்ட கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்


D.Ambujavalli
மே 30, 2024 06:23

இவ்விதிகள் அமல்படுத்தப்பட்டால் அரசு வாகனங்கள், பேருந்துகள் ஒன்றுகூட வீதியில் ஓடமுடியாதே இன்னும் எத்தனை அரை டிக்கெட்டுகள் கார், two wheelers ஒட்டி எத்தனை உயிர்களை எடுக்க வேண்டுமோ?


தமிழன்
மே 30, 2024 05:59

ஆனால் இந்த தரமில்லாத? சாலைகளால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க எந்த அபராதமும் கிடையாதோ??


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை