உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் 

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் 

மதுரை : துாத்துக்குடி ராமர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:கயத்தாறு அருகே தீத்தம்பட்டியில் வண்ணான் ஊருணி உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊருணியை பழைய நிலைக்கு கொண்டு வரக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: சர்வேயில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் 4 மாதங்களில் அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி