உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு: இந்திய கம்யூ.,

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு: இந்திய கம்யூ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் தள்ளுபடி, கட்டப் பஞ்சாயத்திற்கு தடை, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் எஸ்.சி., இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, இந்திய கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும்' என, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னையில் நேற்று வெளியிட்டார். அதை, கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார். மாநில செயலர் முத்தரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் லாபகரமான கொள்முதல் விலை கிடைப்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படும். விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் ஆணவக் கொலை, கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க சட்டம் இயற்றப்படும் மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் எஸ்.சி., இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் அனைத்து பயிர்களையும் உள்ளடக்கிய பயிர் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, தாமதமின்றி இழப்பீடு வழங்கப்படும் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, பகத் சிங் பெயரில் தேசிய வேலை உறுதிச் சட்டம் கொண்டு வரப்படும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேசிய இளைஞர் கொள்கை உருவாக்கப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்  வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் பிளஸ் 2 வகுப்பு வரை இலவச கல்வி தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமாகச் செயல்படுவது உறுதி செய்யப்படும்.இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பின்னர் பேட்டியளித்த முத்தரசன், ''லோக்சபா தேர்தலில் வென்று, இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது, எங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியுடன் போராடுவோம்.''தேர்தல் நேரத்திலும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சிந்தனை
ஏப் 01, 2024 15:58

எங்களுக்கு புரிந்தது, உங்கள் கட்சியில் மூளை உள்ளவன் யாரும் இல்லை என்று


Yaro Oruvan
ஏப் 01, 2024 13:46

ஹா ஹா உண்டியல் குலுக்கிகள் குறித்து கண்ணதாசன் எழுதியது: " யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அண்டிபிழைத்து தாங்களும் உயிரோடு இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு கும்பல் "


A P
ஏப் 01, 2024 11:52

இந்து மதத்தில் ஜாதி கொடுமை என்று உண்மைக்குப் புறம்பாக செய்தி பரப்பி மதம் மாறிவிட்டவர்கள் வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளவர்களே அவர்கள் இந்து மதத்தில் பிரிவான எஸ் சி / எஸ் டீ இட ஒதுக்கீடு கேட்கமாட்டார்கள் அவர்கள் அவர்களுக்குத் தகுந்த மதங்களில் இருந்து கொண்டு தன் வருமானத்தில் பத்து சதவீதம் பங்குத்தொகை மதகுருமார்களுக்குக் கொடுத்துவிட்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு புனிதராகி வாழ்ந்து கொண்டு, மீண்டும் மீண்டும் பாவங்கள் செய்து கொண்டு மீண்டும் மன்னிப்பு பெற்று சந்தோஷத்துடன் தான் உள்ளார்கள் இடையில் இந்த வெட்கங்கெட்ட கமியூனிஸ்ட்கள் இதனை அரசியலாக்கி நல்லவர்களை தீயவர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள் மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர இந்த தீய அரசியல் வாதிகள் ஒருபோதும் விரும்பியதில்லை இவர்கள் சொல்வதெல்லாம், " உழைக்காதே, சம்பளம் மட்டும் அதிகமாக வாங்கு, அதற்குப் போராடு " என்பதுதான்


Rajasekar Jayaraman
ஏப் 01, 2024 11:31

கையால் ஆகாத ... குரல் கொடுக்கிறதுக்கு நீங்க எதற்கு அதை நாங்கள் தெருவிலே சென்று குரல் கொடுப்போம் நாங்கள் பலிகடா வா மதம் மாறாமல் இருப்பவர்கள் ஏமாளிகள் என்று சொல்கிறீர்களா மதம் மாறுவதற்கு ஊக்குவிக்கும் கம்யூனிஸ்ட்கள் எங்களுக்கு வேண்டாம்.


Ramalingam Shanmugam
ஏப் 01, 2024 11:10

அங்கே போனா எல்லாம் கிடைக்கும் என்று சொன்னார்களே உனக்கு தான் சாதி மதம் கிடையாதே இன்னொரு நூறுநாள் திட்டமா நாடு உருப்பட்டு விடும் உன்னை விரட்டி அடித்தால் நாடு உருப்படும்


vadivelu
ஏப் 01, 2024 09:05

ஏண்டா நீங்களா சாதியை ஒழிக்க போறீங்க பூரா நீங்களே உங்க கட்சியில் இருக்கிறீங்க,


RAMAKRISHNAN NATESAN
ஏப் 01, 2024 08:59

ஹிந்து மதத்தில் சாதி வேறுபாடு இருப்பதால் மதம் மாறுகிறோம் என்று சொல்பவர்கள், ஹிந்து மதத்தின் சாதிகளை வைத்து இடவொதுக்கீடு பெறுவதில் நியாயமிருக்கிறதா ????


VENKATASUBRAMANIAN
ஏப் 01, 2024 08:33

கம்யூனிஸ்டுகள் காணாமல் போய் விட்டார்கள்


VENKATASUBRAMANIAN
ஏப் 01, 2024 08:10

கம்யூனிஸ்டுகள் காணாமல் போய் விட்டது திமுகவின் சவாரி செய்து வருகிறது


Sabari S
ஏப் 01, 2024 11:02

Good news


கண்ணன்
ஏப் 01, 2024 07:56

முநலில் பத்தாண்டுகளாக இயலாத கொள்ளை ஆரம்பிக்கப்படும் பின் அது தொடரும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை