உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோழிக்கோட்டில் துணிகர சம்பவம்; முகத்தில் மிளகாய்ப்பொடி வீசியடித்து ஏ.டி.எம்., பணம் ரூ.25 லட்சம் கொள்ளை

கோழிக்கோட்டில் துணிகர சம்பவம்; முகத்தில் மிளகாய்ப்பொடி வீசியடித்து ஏ.டி.எம்., பணம் ரூ.25 லட்சம் கொள்ளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: கோழிக்கோட்டில் எடி.எம்.முக்கு பணம் கொண்டு சென்ற கார் டிரைவர் மீது மிளகாய் பொடியை வீசியடித்த மர்ம நபர்கள், ரூ.25 லட்சம் கொள்ளையடித்து தப்பினர்.கேரளா, கோழிக்கோடு பீடிகா என்ற இடத்தில், காரில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது காரை வழிமறித்த, மர்மநபர்கள் டிரைவரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். கார் டிரைவர் எரிச்சல் தாங்காமல் அலறித்துடித்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காரில் இருந்த ரூ.25 லட்சத்தை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பிவிட்டனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் காருக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தவர்களை மீட்டனர்.கொயிலாண்டி போலீசார், கார் டிரைவர் சுஹைலையும், அவரது வாகனத்தையும் கைப்பற்றினர். ஏடி.எம்.,களில் பணம் நிரப்புவதற்காக ரூ.25 லட்சம் கொண்டு செல்லப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கார் டிரைவர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சாட்சியங்கள் சேகரித்தனர். மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.பய்யோலியைச் சேர்ந்த கார் டிரைவர் சுஹைல் கூறியதாவது: காரில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் வழிமறித்தனர். நிறுத்தாமல் செல்ல முயற்சி செய்தேன். அப்போது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, காரைக் கட்டுப்படுத்தினர். பணத்தை திருடிவிட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 23, 2024 07:50

ATM இல் பணம் நிரப்ப காரில் செல்லமாட்டார்கள். அதற்கான பாதுகாப்பு வேனில் பாதுகாப்புடன் செல்வார்கள். உள்குத்து வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 15:55

கோழிக்கோட்டில் என்றதும் வாசகர்கள் உடனே புலன் விசாரணை ஆரம்பிச்சுட்டாங்க. இதுவே பா ஜ க ஆட்சி நடக்கிற மாநிலமாக இருந்தால்... இந்த பக்கம் காலியா இருக்கும். வங்கிகள் ஒன்றிய அரசின் கீழ் வருகின்றன. மாநில போலீஸ் காவலை எந்த வங்கியும் வைத்துக் கொள்வதில்லை ன்னு கூடத் தெரியாம....


Jysenn
அக் 20, 2024 15:38

கண்ணால் காண்பதும் பொய் .காதால் கேட்பதும் பொய். கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் .


Anantharaman Srinivasan
அக் 20, 2024 14:27

சந்தேகத்துக்கு இடமளிக்கும் கூட்டுக்கொள்ளை. யார்யார் சம்பந்தம் என்பது விசாரணையில் கண்டுபிடிக்க வேண்டும்.


Ramesh Sargam
அக் 20, 2024 12:34

அது என்ன கேரளாவில் மட்டும் ஏடிஎம் கொள்ளை அதிகமாக நடக்கிறது. அங்குள்ள காவல்துறையினர் அந்த அளவுக்கு எதற்கும் லாயக்கில்லாதவர்கள் போல் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் ஒரு மிகப்பெரிய ஏடிஎம் கொள்ளை கேரளாவில் நடந்தது. அதன் பிறகாவது அங்குள்ள காவல்துறையினர் மிக எச்சரிக்கையாக பணிபுரிய வேண்டாமா...?


raja
அக் 20, 2024 11:25

"மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்" ...மர்ம நபர்களா புரிந்து விட்டது யார் செய்திருப்பார்கள் என்று....


ayen
அக் 20, 2024 10:38

கார் கண்ணாடி திறந்து வைக்கப்பட்டிருந்தது இல்லை வந்தவர்கள் கார் கண்ணாடியை உடைத்தார்களா கார் கண்ணாடி உடைக்கும் வரை துப்பாக்கி ஏந்திய நபர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?


sundarsvpr
அக் 20, 2024 10:07

காரில் இருந்தவர்கள் யார் என்பது செய்தியில் இல்லை . அவர்கள் ஏ ட்ட எம் இல் பணம் கட்ட வங்கி ஊழியராக இருக்கலாம். உள்ள இருந்த எல்லோரும் ஊழியரா என்பதும் தெரியவில்லை. வழிமறிக்க வந்தவர்கள் மிளகாய் பொடி வைத்துஇருந்தார் என்றால் எப்படி?


rasaa
அக் 20, 2024 09:46

கதை. துப்பாக்கி ஏந்திய காவல் என்னவாயிற்று? முறையாக விசாரித்தால் உண்மை தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை