உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலம் வாங்கி ரூ.5.80 கோடி மோசடி; ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை

நிலம் வாங்கி ரூ.5.80 கோடி மோசடி; ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை

சென்னை, : ஜெயங்கொண்டம் விவசாயிடம் நிலம் வாங்கி, 5.80 கோடி ரூபாய் மோசடி செய்த, சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் உட்பட மூன்று பேரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் செல்வமணி; விவசாயி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது நண்பர் வாயிலாக, சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த, ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன், 56; அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த ரமேஷ், 46; சங்கர், 48 ஆகியோர் அறிமுகமாகினர். செல்வமணியுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.ஜெயங்கொண்டத்தில், ரமேஷ் சிங், மோகன்சிங், உஷாராணி ஆகியோருக்கு சொந்தமான, 48,347 சதுரடி நிலத்தை செல்வமணி வாங்கி உள்ளார். இந்த நிலத்தை கணேசன், 7.20 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த இடத்திற்கு அருகே உள்ள நிலத்தில், செல்வமணிக்கு வீடு ஒன்றை கட்டித் தருவதாகவும் தெரிவித்துள்ளார். முன் பணமாக, 1.40 கோடி ரூபாயை கொடுத்து, இடத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவும் செய்து கொண்டார். மீதி தொகையான, 5.80 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டார். இதற்கு, ரமேஷ், சங்கர் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து, அரியலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், செல்வமணி புகார் அளித்துள்ளார். அங்குள்ள நீதிமன்றத்திலும் உத்தரவு பெற்றுள்ளார். அதன் அடிப்படையில், அரியலுார் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், கணேசன், ரமேஷ், சங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மூவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raju
மே 13, 2024 06:16

செல்வமணிக்குதான் புத்தி முழுப்பணமும் கிடைக்கு முன்னயே பத்திரம் பண்ணிக் கொடுத்துட்டான்சப் ரிஜிஸ்டரார் எதுவும் கண்டுக்கலயோ செய்தி தவறுவேற ஏதோ சூட்சுமம் இருக்குடோய்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை