உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேமிப்பு கணக்கில் மோசடி 2 போஸ்ட்மேன்களுக்கு வலை

சேமிப்பு கணக்கில் மோசடி 2 போஸ்ட்மேன்களுக்கு வலை

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சாந்தங்காடு கிராமத்தில் உள்ள போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கில், பலரிடம், 16 லட்சத்து 88 ஆயிரத்து 64 ரூபாயும், திருவோணம் அருகே அக்கரைவட்டம் கிராம போஸ்ட் ஆபீசில் 3 லட்சத்து 19 ஆயிரத்து, 600 ரூபாயும் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து போஸ்டல் இன்ஸ்பெக்டர் காசிநாதன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், சாந்தாங்காடு போஸ்ட்மேனாக பணியாற்றிய களக்காடு தனசேகர், 2019 ஆக., 2ம் தேதி முதல் 2022 டிச., 4ம் தேதி வரை சேமிப்பு புத்தகத்தில் வரவு வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் வாங்கி, பணத்தை மோசடி செய்தது தெரிந்தது.இதே போல, அக்கரை வட்டம் போஸ்ட் ஆபீசில் பணியாற்றிய உதவி போஸ்ட்மேன் முத்து தங்கப்பா 2020ல் பலரின் சேமிப்பு கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக 2023ல் போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.இவ்வழக்கு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள போஸ்ட்மேன்கள் தனசேகர், முத்து தங்கப்பா உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ