உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக 2 மனுக்கள் தாக்கல்

செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக 2 மனுக்கள் தாக்கல்

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும், 10 ஆண்டுகளில், தனியார் வங்கியில் பணியில் இருந்தவர்கள் விபரம், டிபாசிட்தாரர்களின், 'பான்' விபரம் கேட்டு, செந்தில் பாலாஜி தரப்பில், மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மேலும் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், '2012 முதல் 2022 வரை பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கிகளில் பணியில் இருந்த ஊழியர்களின் விபரங்களை வழங்கவும், 2016 முதல் 2022 வரையிலான காலத்தில் செந்தில் பாலாஜி, அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் பணம் டிபாசிட் செய்தவர்களின் 'பான்' எண் விபரங்களை வழங்கவும், வங்கி நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கில் இரு தரப்பும் வரும் 10ம் தேதி வாதாட வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 37வது முறையாக நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை