மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
51 minutes ago
சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 28வது முறையாக நீட்டித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூனில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி, அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான விசாரணை நேற்று துவங்கியது. செந்தில் பாலாஜி தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதத்தை துவக்கினார். அவர் தரப்பு வாதம் நிறைவு பெறாததால் இன்று தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 28வது முறையாக இன்று வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.
51 minutes ago