உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

கள்ளச்சாராய விவகாரம்: கவர்னர் ரவியை சந்தித்தார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று (ஜூன் 24) சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் கவர்னரை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாலை வலியுறுத்தி உள்ளார். திமுக அரசு கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கவர்னர் ரவியிடம் அண்ணாமலை புகார் மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 17:15

மணிப்பூர் பிரச்னையையும், தமிழக கள்ளச்சாராய பலிகளையும் ஒரே விதமாகக் கருதி ஒப்பிடும் அளவுக்குத்தான் திமுக தலைவர்களுக்கும், திமுக அடிப்பொடிகளுக்கும் அறிவு இருக்கிறது ...


முருகன்
ஜூன் 24, 2024 15:31

அய்யோ என்ன ஆக போகதே தெரியல கிளம்பி விட்டார்


கனோஜ் ஆங்ரே
ஜூன் 24, 2024 15:23

அரசியலமைப்புச் சட்டத்தின்படி... ஒரு ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன்.. . அவர் நீதிவழுவா மன்னாக இருக்கணும்... அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினை ஒன்றுபோல் பாவிக்க வேண்டும்... ஒரு கண்ணில் சுண்ணாம்பும், ஒரு கண்ணில் வெண்ணெயும் வைத்து பார்க்கக் கூடாது... பாஜக இம்மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சியும் அல்ல... ஒரு நாலு எம்.எல்.ஏ., வைத்திருக்கிற கட்சி, அவ்வளவே. இதைவிட பாமக அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கு... ஆனால், ஒரு நாலே நாலும் எம்எல்ஏ வச்சிருக்கிற கட்சியான பாஜக மாநிலத் தலைவரை நிர்வாகிகளுடன் சந்திக்கிறது இருந்தே... இவர் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அக்கட்சியையே புடிச்சுட்டு தொங்கக்கூடாது... தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரை பாகுபாடு, வேறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளணும்... அதுதான் அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு தலைசிறந்த நீதிநெறி


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 17:22

\\ ஒரு நாலே நாலும் எம்எல்ஏ வச்சிருக்கிற கட்சியான பாஜக மாநிலத் தலைவரை நிர்வாகிகளுடன் சந்திக்கிறது இருந்தே... //// மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ..... அவருக்கு அதிகாரம் கிடையாது ...... அவர் பார்க்கும் பணி ஒரு தபால்காரரின் பணிதான் ....


babu
ஜூன் 24, 2024 15:01

ஏற்கனவே குடுத்த இரும்பு பெட்டி என்ன ஆச்சு


Narayanan
ஜூன் 24, 2024 14:47

காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் இந்த நேரத்தில் ஆட்சியை கலைத்திருப்பார்கள். அந்த விஷயத்தில் காங்கிரெஸ்ஸை பாராட்டலாம்


venugopal s
ஜூன் 24, 2024 14:38

வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை


வல்லவன்
ஜூன் 24, 2024 14:23

அப்படியே குஜராத் துறைமுகத்தில் பிடித்த ஹெராயின் பற்றியும் பேசலாமே


s sambath kumar
ஜூன் 24, 2024 16:53

குஜராத் துறைமுகத்தில் பிடிபட்டது இன்டர்நேஷனல் கிரிமினல் மாபியாவோட ஹெராயின் அதுக்கும் குஜராத் அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? கள்ளக்குறிச்சியில் ஆளும் கட்சி கீழ்மட்ட தொடர்போட தான் எல்லாமே நடந்திருக்கு. அவங்களை கட்சியை விட்டு நீக்கி இருந்தா இவ்வளவு அரசியல் இருந்திருக்காது


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 17:24

குஜராத்தில் பிடிபடுகிறது ..... தமிழகத்தில் ???? தப்பு செய்யிறவனையே அயலக அணி பொறுப்பாளரா நியமிக்கிற கழகத்தின் அடிமையாக இருக்கிறவர்கள் பேசக்கூடாது ......


Vathsan
ஜூன் 24, 2024 14:14

பாண்டிச்சேரியில் குடி ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுகுறித்து ஏதாவது பேசலாமே.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 17:17

கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளதா ???? அதுவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ???


Vathsan
ஜூன் 24, 2024 14:13

நீட் பற்றி ஏதாவது கருத்து தெரிவிக்கலாம் அண்ணாமலை. கல்வித்துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. பதவி விலக அண்ணாமலை நிர்பந்திக்கவேண்டும்.


anil
ஜூன் 24, 2024 13:52

feb 11, 2019 - 55 were died in Uttar Pradesh, all states are common in this


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ