உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவுக்கு வரும் பத்திரங்கள் நிலை; சார்-பதிவாளர்களுக்கு புது உத்தரவு

பதிவுக்கு வரும் பத்திரங்கள் நிலை; சார்-பதிவாளர்களுக்கு புது உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சொத்து விற்பனை பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் உரிய முறையில் தாக்கல் செய்கின்றனர். இதில், கூடுதல் தகவல், சரிபார்ப்பு தேவை எனில், அது தொடர்பான பத்திரங்கள் பதிவான, வேறு சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, சார் - பதிவாளர் உறுதி செய்ய வேண்டும். இது பற்றிய விபரங்களை, பத்திரத்தை தாக்கல் செய்தவர்களுக்கு தெரிவிப்பது இல்லை. சமீபத்தில் ஒரு வங்கி சார்பில், சொத்து விற்பனை சான்றிதழை, ஏற்கனவே உள்ள சொத்து ஆவணங்களுடன் இணைக்கும்படி, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சார் - பதிவாளர் அதை இணைக்காமல், அது வேறு எல்லையில் வருகிறது என்று, வேறு அலுவலகத்துக்கு அனுப்பி விட்டார். இந்த விபரத்தை வங்கி மற்றும் சொத்து உரிமையாளருக்கும் தெரிவிக்கவில்லை. அதனால், குறிப்பிட்ட சொத்து விற்பனை சான்றிதழ், எங்கு சென்றது என தெரியாத நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில், பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவு:

சொத்து பரிவர்த்தனைக்காக வரும் பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை, அதை வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டும். பத்திரங்கள் தொடர்பான அனைத்து கடித போக்குவரத்தையும், சார் - பதிவாளர்கள், சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.சிறு பிழைகள் இருக்கிறது என்று கூறி, பத்திரத்தை தாக்கல் செய்தவரை அலைக்கழிக்கக் கூடாது. இந்த வழிகாட்டுதல்களை, சார் - பதிவாளர்கள் முறையாக கடைப்பிடிப்பதை, மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R S BALA
மே 13, 2024 19:36

இந்த சார் பதிவாளர் சம்மந்தமா எந்த ஒரு சேதி வந்தாலும் சிப்புதாங்க வருது


Joe Rathinam
மே 13, 2024 10:00

சார் பதிவாளர்கள் பெரும்பாலும் உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்களின் உதவியாளர்களின் உதவியுடன் செயல்படுகிறார்கள் பத்திர எழுத்தர்களும் மற்றும் அவர்களது உதவியாளர்கள் யாரும் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்குள் வரக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தும் அதை பத்திரப்பதிவு அலுவலர்கள் பின்பற்றுவதில்லை கனனிமூலம் பத்திரம் எழுதுவது மிகவும் எளிதானது எனவே தற்போது பத்திர எழுத்தர்களுக்கான உரிமம் வழங்குதலை நிறுத்த வேண்டும் அதற்குப் பதிலாக பத்திரப் பதிவு அலுவலக கணினி இயக்குனரே பத்திரம் எழுதுவது நல்லது மேலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இதை மிகவும் எளிதாக்கலாம் இதற்கு விற்பவர், வாங்குபவர், சொந்து விபரங்கள் மற்றும் எந்த வகையான பரிவர்த்தனை ஆகிய விபரங்களை உள்ளீடு செய்தால் பத்திரத்தை கணினியில் அச்சடித்து விடலாம் இதனை அரசு நடைமுறைப்படுத்தினால் இடைத்தரகர்களைத் தவிர்க்கலாம்


sethu
மே 13, 2024 11:59

ஆறு நபர்கள் வேலை செய்யும் ஒரு இடத்தில் ஒரு கம்ப்யூட்டராய் அரசு வாங்கி வைத்து விட்டு ஒருவர் போதும் பேர்களை எடுத்து விடலாம் என எண்ணியது ஆனால் அந்த பேர்களும் என்ன செய்தார்கள் என்றால் தாங்கள் பேர்கள் செய்யும் வேலையை வேலையே இல்லை கடைசியாக கம்ப்யூட்டர் மானிட்டர் செய்து அதை ஸ்டொர் செய்வது ஒரு கம்ப்யூட்டர் தெரிந்த ஆபரேட்டர் ஒருவரை நியமித்து நபராக உயர்த்திக்கொண்டு விட்டனர் இதில் யார் புத்திசாலி


Siva
மே 13, 2024 07:58

காசு கொடுத்து விட்டு வாருங்கள்காசு தான் பதிவு அலுவலகம் வாழ்க ஊழல் வளர்க ஊழல் வாதி


D.Ambujavalli
மே 13, 2024 06:47

சார் பதிவர்கள் எங்கே பத்திர விவரங்களை படித்துக்கொண்டு உடகார்க்கிறார்கள் புரோக்கர்கள் ஒழுங்காக ‘வர வேண்டியதை’ ஒவ்வொரு சுற்றுப்பட்டு தேவதை முதல் மூலவர் வரை சேர்ப்பித்துவிட்டால் பார்ட்டிகளின் கையெழுத்தை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போடுவதுடன் அவர் பணி முடிந்து விடுகிறதே


Kasimani Baskaran
மே 13, 2024 05:30

இவர்கள் வேலை செய்யவே கூட அரசாணை தேவைப்படுவது நிர்வாகம் சரியில்லை என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது அரசாணை பிறப்பித்தா மாதா மாதம் சம்பளம் கொடுக்கிறார்கள்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை