உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழர்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 'பிரதமர் மோடி ஓட்டுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழத்தின் மீதும் தமிழக மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். ஓட்டுக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல் திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து ஓட்டு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல.

அவதூறு செய்ய வேண்டாம்!

முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும், பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாக தமிழக மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

திருடர்கள்

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழக மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?. தமிழக மக்களை நேர்மை யற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா?. தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?.

இரட்டை வேடம்

தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஓட்டு சேகரிக்கும் போது தமிழக மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஓட்டுக்காகத் தமிழத்தையும், தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி ஓட்டுக்காக மக்களை அவதூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 80 )

Kumar Kumzi
மே 24, 2024 12:22

உன் கூட்டணிக்காரனே தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள்னு சொல்லுறான் அதுக்கு ஏன் பொங்கல விடியல்


Ganapathy Subramanian
மே 24, 2024 09:52

தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி மொழி தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் இவையெல்லாம் தமிழர்களை போற்றும் வார்த்தைகள் சரிதானே தலைவர் அவர்களே?


ANAND
மே 24, 2024 08:54

மற்றவர்களை குறை சொல்ல தரமற்ற....


Sivak
மே 23, 2024 23:24

தலைவரே சும்மா இருங்க நீங்க வேற நாமளே தமிழர் கிடையாது தமிழர்களை அசிங்கமா பேசின நம்ம தாடி ராம்சாமி போட்டோவை frame போட்டு தலைக்கு மேல தொங்க விட்டுகிட்டு நமக்கு இதெல்லாம் தேவையா ??? இப்படிக்கு ஊ பீஸ்


ANAND
மே 24, 2024 08:55

சரியான சவுக்கடி


Narayanan
மே 23, 2024 16:23

தமிழர்களை கஞ்சா பொய் வழக்கில் போட்டு கைதும் செய்து தமிழர்களின் மானத்தையே வாங்கிவிட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாயே இது நியாமா ? கருணாநிதி சமாதிக்கு சென்று கேட்டபோது அவர் சொன்னார் நான் ஏன் ஸ்டாலினை நான் உயிருடன் இருக்கும்வரை முதல்வர் ஆக்கவில்லை என்று இப்போதாவது புரிகிறதா என்றார் ? மேலும் நாங்கள் தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்வோம் ஆனால் இலங்கை தமிழர்களை கொல்ல உதவியவர்கள் நாங்கள்தான் ஆக நாங்கள் தமிழர்களை வாழவைக்க வந்தவர்கள்


panneer selvam
மே 23, 2024 14:34

Stalin ji , do you have the treasury keys of Lord Jaganath or are you aware of its presence ? If you are not , then you need not react


Ramalingam Shanmugam
மே 23, 2024 13:43

தன்னால் மகனை சுளுக்கெடுக்க போறாங்க பேசுங்க பேசுங்க ஆடும் வரை ஆடு வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு


Thiruvengadam Ponnurangam
மே 23, 2024 03:57

இப்படி மடை மாற்றி பேசி பேசி மக்களை ஏமாளிகள் என் நினைத்தகாலம் மலை ஏறிவிட்டது என அய்யா அவர்களிடம் எடுத்து சொல்லுங்கள் மோடி அய்யா அவர்கள் தமிழர்கள் என கூறவில்லை என்ன சொன்னார் என சமூகவலைதளங்களையும் அவர்பேசியதையும் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு நிதானமாக பதட்டமாகமல் சிந்தியுங்கள் நன்றி


Kumar
மே 22, 2024 20:57

ஐயா அவரு உங்கள மாதிரி உள்ள திருடர்களைத்தானே சொன்னார் தமிழர்களை அல்ல


tmranganathan
மே 22, 2024 18:34

DK DMK etc parties without any reason spouted for years from justice party period, venom on brahmins if you justify that modi is justified for raising voice on the loot by DMK govt from all templesone crore worth gold from HR&CE temple in tirupullaani is looted and no action taken to nab the culprit


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி