உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பல்கலைகள்: மாணவர்களே உஷார் 

போலி பல்கலைகள்: மாணவர்களே உஷார் 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: நாடு முழுதும் பல்கலை மானியக்குழு அங்கீகாரம் இன்றி செயல்படும் போலி பல்கலை பட்டியல், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, தேசிய அளவில் 21 பல்கலைகள் போலி பல்கலையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆந்திராவில் 2, டில்லியில் 8, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் ஒரு பல்கலை வீதமும், உத்தர பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 2, கேரளாவில் 2 உட்பட, 21 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் எந்த பல்கலையும் இப்பட்டியலில் இல்லை.பிற மாநிலங்களில் படிப்பிற்காக செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் விபரங்களை, https://www.ugc.gov.in/ எனும் யு.ஜி.சி., இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
மே 20, 2024 09:47

பிஜேபி அரசின் பல்கலையை படிப்பும் சேர்த்து தானே சொல்லுறீங்க


RAJ
மே 20, 2024 07:52

என்ன சார் போலி மதுக்கடை மாதிரி சொல்ற பில்டிங் கட்டி போர்டு வச்சு அட்மிஷன் போடற வர???


Kasimani Baskaran
மே 20, 2024 07:42

அரசியல் வியாதிகள் நடத்தும் பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தான் அதிகம் உண்டு அதனால்தான் நீட் வேண்டாம்


அப்புசாமி
மே 20, 2024 06:05

போலி பல்கலைகளை இழுத்து மூட துப்பில்லை. லிஸ்ட் போட்டு எச்சரிக்கையாம்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி