திடீர் கோளாறு; சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
சென்னை: இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து கொச்சி நோக்கி 117 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனால், சுமார் 15 நிமிடங்கள் வானத்தில் விமானம் வட்டமடித்தது. பயணிகள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பதற்றமடைந்தனர். அதன்பிறகு, விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் விமானத்தில் அமர்ந்துள்ள நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது. பிரச்னை சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் கொச்சிக்கு புறப்பட்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.