உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: மேலும் 3 பேர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: மேலும் 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூன்று பேரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று (மே 25) மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன்; பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 'ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர்' இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் இளைய சகோதரர் அப்துல் ரகுமான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bxet9byt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிகான் சாலையில், 'மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' என்ற பெயரில், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்துள்ளனர்.மேலும், 'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற,' யு டியூப்' சேனல் வாயிலாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்து உள்ளனர். இதை தீவிரமாக கண்காணித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.இந்நிலையில், இன்று (மே 25) தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உத் தஹ்ரிர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
மே 25, 2024 17:39

சிறையில் இவர்களுக்கு ஹலால் சிக்கன் ஹலால் பிரியாணி போட்டு பார்த்துக் கொள்ளவும். வெளியே வந்தவுடன் மறுபடியும் அவர்கள் வேலையை அவர்கள் ஆரம்பித்து விடுவார்கள்.


Kasimani Baskaran
மே 25, 2024 16:08

திராவிட மாடல் கல்வியில் நாட்டுப்பற்று சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லை என்பது துரதிஷ்டவசமானது. படித்து பேராசிரியராக இருப்பவன் கூட தீவிரவாதத்தில் ஈடுபட எத்தனிப்பது தமிழகம் கூட காஷ்மீர் போல ஆகிவிடுமோ என்ற கவலையை நிச்சயம் கொண்டு வரும். திராவிட சித்தாந்தங்கள் நாட்டுக்கு ஒவ்வாதவை. சமீப காலமாக தனி நாடு என்று பேசுவோர் அதிகரித்து இருக்கிறார்கள். தடை செய்வது காலத்தின் கட்டாயம்.


J.V. Iyer
மே 25, 2024 16:03

இந்த பயங்கரவாதிகளை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கவேண்டும். இவர்களால் பாரதத்திற்கு ஒரு பயனும் இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை