உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழை கைவிடும் தமிழக அரசு: ஆங்கிலத்திற்கு மாறிய அரசு பஸ் குறிப்பேடு

தமிழை கைவிடும் தமிழக அரசு: ஆங்கிலத்திற்கு மாறிய அரசு பஸ் குறிப்பேடு

சென்னை: அரசு பஸ் குறிப்பேடு படிவம் தற்போது ஆங்கிலத்தில் வழங்கப்படுவது, போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன; 15,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதிர்ச்சி

தினமும் பணிமனையில் இருந்து பஸ் புறப்படும்போது, அந்த பணிமனை கிளை மேலாளர் வாயிலாக, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு, 'வண்டி குறிப்பேடு' எனும் படிவம் வழங்கப்படும்.பஸ் வழித்தட எண், புறப்பட்ட நேரம், வந்தடையும் நேரம், ஓட்டுநர், நடத்துநர் பெயர்கள் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். அதுபோல் வழியில் ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.பஸ்சில் குறைபாடு மற்றும் பழுதுகள் ஏற்பட்டால், அந்த படிவத்தில் தெளிவாக எழுதி, அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்த படிவம், பல ஆண்டுகளாக தமிழில் வழங்கப்பட்டு வந்தது.தற்போது, சென்னையில் மத்திய பணிமனை, அண்ணாநகர் உள்ளிட்ட பணிமனைகளில், இந்த படிவம் ஆங்கிலத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.இது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரமம்

இதுகுறித்து, ஊழியர்கள் சிலர், போக்குவரத்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'ஹிந்தியை எதிர்த்து வரும் தி.மு.க., அரசு, பல ஆண்டுகளாக தமிழில் வழங்கிய படிவத்தை ஆங்கிலத்துக்கு மாற்றுவது ஏன்?' என, கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து, நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:ஓட்டுநர், நடத்துநர்களில் பெரும்பாலும், பிளஸ் 2 வகுப்பு வரை படித்தவர்கள் தான் அதிகம். வண்டி குறிப்பேடு படிவத்தை, ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்வதும், பஸ்களில் ஏற்பட்ட பழுது தொடர்பாக புகார்களை ஆங்கிலத்தில் எழுவதும் அவர்களுக்கு சிரமம்.நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம். வண்டி குறிப்பேடு படிவத்தை மீண்டும் தமிழ் மொழியில் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டாயப்படுத்தவில்லை!'

மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால், வாகன 'லாக் ஷீட்' எனப்படும் வண்டி குறிப்பேடு, ஆங்கிலத்தில் அளிக்கப்படுகிறது. ஊழியர்கள் தங்களது விபரங்கள் அல்லது பஸ் குறித்த புகார்களை, ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பாரதி
பிப் 27, 2025 13:01

சீனா ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்துள்ளது! ஆங்கிலம் உலக மொழி என்பது சதிப் பொய்!


sankaranarayanan
பிப் 27, 2025 12:18

இன்னும் சிறிதுகாலம் சென்றால் சுந்தர தெலுங்கிலே மாற்றப்பட்டு வந்தாலும் வரலாம் ஜாக்கிரதை


Barakat Ali
பிப் 27, 2025 09:09

தமிழ் நீச பாஷை .... காட்டுமிராண்டி பாஷை .... தமிழ் சனியன் .... வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றெல்லாம் சொன்னவர் ஈவேரா .... அதைத்தான் அவரது வழிவந்தவர்கள் பின்பற்றுகிறார்களோ ????


ஆரூர் ரங்
பிப் 27, 2025 09:08

ஆனா உருதுவில் படிவம் கொடுத்தா வாயே திறக்க மாட்டார்கள்.


Venkataraman
பிப் 27, 2025 09:03

ஆங்கிலத்தை திணிக்கும் திமுகவினர் இந்தியை எதிர்ப்பது ஏன்? ஆங்கிலம் என்ன திமுகவினரின் தாய்மொழியா?ஆங்கிலேயர்கள் அனைவரும் தமிழ் படிக்கிறார்களா? ஆங்கிலத்தை படிப்பதால் தமிழ் மொழி அழிந்து விடாதா?


சுராகோ
பிப் 27, 2025 08:44

தமிழ் தமிழ் என்று தமிழை அழிப்பார்கள். மத்திய அரசை பாசிசம் பாசிசம் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் பாசிசம் செய்வார்கள். வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டை பின்னோக்கி செலுத்துவார்கள். பி ஜெ பி யை வெறுப்பு அரசியல் செய்கிறார்கள் என்று சொல்லி இவர்கள் இந்துக்கள் மீது வெறுப்பு அரசியல் செய்யவார்கள். மது ஒழிப்பு என்று சொல்லிக்கொண்டு மது விற்றுக்கொண்டிருப்பார்கள். போதை பொருட்களை உபயோக படுத்தாதே என்று விளம்பரத்தில் சொல்லுவார்கள் ஆனால் அதை தடுக்க மாட்டார்கள். ஊழலே செய்யவில்லை என்பார்கள் ஆனால் ஊழலையே கொள்கையாக வைத்திருப்பார்கள். மக்களுக்கு நாங்கள் தான் நல்லது செய்ய இருக்கிறோம் என்பார்கள் அதற்காக ஒரு இம்மி முயற்சியும் எடுக்கமாட்டார்கள். இவர்கள் யார் என்று சொல்லமுடியுமா?


Sampath Kumar
பிப் 27, 2025 07:38

நல்லவேளை ஹிந்தியில் இல்லை சங்கி பயபுள்ள போக்குவரத்து துறையில் புகுந்து உள்ளது அதுபண்ணும் சேட்டை தான் இது அடையாளம் கண்டு நல்ல கவனித்தால் சரியாக போகும்


Kjp
பிப் 27, 2025 09:17

இப்படியே முட்டு கொடுத்து கொண்டே இருங்கள்.கண்டிப்பாக திமுக ஆட்சி 2026 ல் திமுக இருக்காது.எந்த கேள்விக்குவது சரியான பதில் கொடுக்க முடியவில்லை.சட்டியில் இருந்தால் தானே அகப்பையிலே வரும்.


B MAADHAVAN
பிப் 27, 2025 07:26

ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு என்று ஒருநாளும் சொன்னதில்லை. ஆங்கிலம் நம் சகோதர மொழி. நாங்கள் அந்நிய மொழி ஹிந்திக்கு தான் எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என்றும் தங்களை சமஸ்கிருதத்தில் திராவிடம் என்று சொல்லித் திரிபவர்கள் எல்லாம் இப்படி சொல்லி சொல்லியே டாஸ்மாக் தண்ணீரை ஊற்றிக் கொடுத்து, பெரும்பாலான தமிழக மக்களை குடிகாரர்கள் ஆக ஆக்கி, அவர்கள் மூளையை மழுங்கச்செய்து தங்கள் வருமான சாம்ராஜ்யத்தை மட்டும் பெருக்கிக் கொள்கின்றனர். உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். வோட்டு போட்டவர்கள் சகித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். தலைவிதி.


Kasimani Baskaran
பிப் 27, 2025 07:02

தமிழை நீக்கி சர்வதேச மொழியான ஆங்கிலத்தை புகுத்தி மாடல் அரசு தொடர் சாதனை.


Priyan Vadanad
பிப் 27, 2025 03:07

தமிழ் நாட்டில் ஆங்கில அறிவு அதிகம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்தியை திணிக்க விரும்பும் வடக்குக்காக இந்தியிலா அச்சடிப்பார்கள்? ஆங்கிலமும் தமிழும் நமக்கு தொடர்பு மொழிகளே இதையும் ஒரு செய்தியாக போட்டுக்கிட்டு


Murugesan
பிப் 27, 2025 07:41

திருடனுக்கு ஆதரவாக இருக்கிற புண்ணியவான் தமிழ் படிவத்தை எதற்க்காக ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும், அரசு ஊழியர்களின் ஆங்கில அறிவை அவர்களிடமே பேசிப்பாரும், இந்தியை பற்றி பேச 200 ஊபிக்குகளுக்கு


Mohan
பிப் 27, 2025 11:24

டுமிழ்நாட்டுல இருக்கிறவங்களுக்கு தமிழே தற்குறி இதுல 12 வது படுச்சவனுக்கு ஆங்கில குறிப்பேடு வேற .. இதுக்கு நீ மானம் இல்லாம முட்டுக்குடுக்குறே , எல்லாம் ஆங்கில த்தில் புலவர்களோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை