உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை

பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:தொழில் துறையில் தமிழகம் முதலிடத்தை பிடித்து வருகிறது. தொழிலாளர்களின் நலனை அரசு முக்கியமானதாக கருதுகிறது. எனவே, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் நலன் கருதி, காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில், 706 கோடி ரூபாயில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது.இது தான், இந்தியாவில் தொழிற்சாலை பணியாளர்களுக்கான முதல் தங்குமிட திட்டம். பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே பாதுகாப்பாக சூழலில், தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. அதிக வசதிகளை உள்ளடக்கிய தங்குமிட வளாகம், மூன்று - நான்கு கிராமங்களை உள்ளடக்கியது.பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அவர், பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திஉள்ளார்.தமிழகத்தில் முதலீடு செய்தால், படித்த, திறமையான பெண்கள் அதிகம் கிடைப்பர் என்ற எண்ணம் தொழில் நிறுவனங்களிடம் ஏற்பட்டுள்ளது.பெண்களுக்கு வேலைவாய்ப்பை மேலும் உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுதும் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதற்கு ஏற்ப புதிய முதலீடுகள், சென்னை போன்ற நகரங்களில் மட்டும் அல்லாமல், மாநிலம் முழுதும் உள்ள பகுதிகளுக்கும் கிடைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஆக 18, 2024 10:17

படித்த வேலையில்லாத இளைஞர்கள் சதவீதம் ஒன்பதரை. இதே தேசீய சராசரியை (ஏழரை)விட மிக அதிகம் . பெருமைப்பட ஒன்றுமில்லை.


Kanns
ஆக 18, 2024 09:16

Any Govt Biasing only for Women is UnConstitutional by Encouraging ProWomen-AntiMen Stance


Kannan Chandran
ஆக 18, 2024 09:12

ஒருவேளை, ....


Kasimani Baskaran
ஆக 18, 2024 07:15

சீன தொழில் நுணுக்கம் வருகிறது. குடும்ப அமைப்பை சிதைக்க இதைத்தவிர வேறு நல்ல நடைமுறை வேறு எங்கும் கிடையாது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறைய பழைய கொள்கலன்களை வைத்து குடியிருப்பு கட்டி அதில் மக்களை மாடுகள் போல அடைத்து தொழிற்சாலையில் வேலை வாங்குவார்கள். வேலை முடிந்தவுடன் சாப்பாடு தூக்கம், திரும்பவும் வேலை என்று ஓய்வில்லாமல் உழைப்பார்கள். மனித உரிமை எல்லாம் பேசமுடியாது.


Svs Yaadum oore
ஆக 18, 2024 06:52

வல்லம் வடகாலில், 706 கோடி ரூபாயில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளதாம் ..இதை கட்டுவது வெளிநாட்டு கம்பெனி .....இது பெரிய சாதனை என்று படிக்காத விடியல் திராவிடனுங்க உருட்டுவானுங்க ...இது போல அடைத்து வைத்து சீனாவில் பல மனித உரிமை மீறல் பிரச்சனைகள் ....அடுக்கு மாடி கட்டிடத்தில் பல கொத்தடிமைகளை அடைத்து வைப்பது ....20000 நபர்கள் தங்குமிடம் எந்த பொழுதுபோக்கு இடவசதி மன நலம் சுகாதார உணவு என்று எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சிறை கைதிகளை விட கேவலமான இருப்பிடம் ....இந்த வெளி நாடு கம்பெனியும் சீனாவில் பல தொழிலாளர் நல அடிப்படை உரிமைகளை மீறியதாக பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது ....இதுக்குத்தான் படிக்காத விடியல் திராவிடனுங்க சிகப்பு கம்பளம் ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை