உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை

பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னை:தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:தொழில் துறையில் தமிழகம் முதலிடத்தை பிடித்து வருகிறது. தொழிலாளர்களின் நலனை அரசு முக்கியமானதாக கருதுகிறது. எனவே, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் நலன் கருதி, காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில், 706 கோடி ரூபாயில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. இது தான், இந்தியாவில் தொழிற்சாலை பணியாளர்களுக்கான முதல் தங்குமிட திட்டம். பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே பாதுகாப்பாக சூழலில், தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. அதிக வசதிகளை உள்ளடக்கிய தங்குமிட வளாகம், மூன்று - நான்கு கிராமங்களை உள்ளடக்கியது. பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அவர், பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திஉள்ளார். தமிழகத்தில் முதலீடு செய்தால், படித்த, திறமையான பெண்கள் அதிகம் கிடைப்பர் என்ற எண்ணம் தொழில் நிறுவனங்களிடம் ஏற்பட்டுள்ளது.பெண்களுக்கு வேலைவாய்ப்பை மேலும் உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுதும் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப புதிய முதலீடுகள், சென்னை போன்ற நகரங்களில் மட்டும் அல்லாமல், மாநிலம் முழுதும் உள்ள பகுதிகளுக்கும் கிடைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி