உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்வேறு திட்டங்களால் தமிழகம் முதலிடம்: அறிக்கை வெளியிட்டு அரசு பெருமிதம்

பல்வேறு திட்டங்களால் தமிழகம் முதலிடம்: அறிக்கை வெளியிட்டு அரசு பெருமிதம்

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களால், நாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் முன்னேறியுள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்ற நாள் முதல், ஓய்வின்றி ஒவ்வொரு நாளும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்; புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறார்.ஈர்த்து வருகின்றனபெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட, தமிழகத்தில் வாழும் அனைத்து பிரிவினரும் நல்வாழ்வு பெற, முதல்வர் நிறைவேற்றி வரும் திட்டங்கள், அண்டை மாநிலங்களையும், அயல்நாடுகளையும் ஈர்த்து வருகின்றன.முதல்வரின் இலவச பஸ் பயண திட்டத்திற்கு, 6,661 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், மாதந்தோறும் 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், 1.15 கோடி பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கும், உதவித்தொகை கிடைக்க அரசு முயற்சித்து வருகிறது.அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியர், உயர் கல்வியை தடையின்றி தொடர, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக, 2.73 லட்சம் மாணவியர் பயன் பெறுகின்றனர். மேம்படுத்தும் பணிஇதேபோல, மாணவர்களுக்கும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'தமிழ் புதல்வன்' திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் வாயிலாக, 4,000 கோடி ரூபாயில், 10,000 கி.மீ., சாலைகளை இரண்டு ஆண்டுகளுக்குள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மகத்தான திட்டங்களால், நாட்டில் தமிழகம் முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Manickam Mani
ஜூலை 18, 2024 21:19

அரசின் பதிவேடுகளுக்கு உண்மை நிலவரத்திற்கு சம்பந்தமிருப்பதில்லை. வெறும் ஏட்டுச்சுரைக்காய். பொய். மிகப்பெரிய பொய். புள்ளிவிவரம்.


Ranganathan
ஜூலை 18, 2024 20:04

திமுக தாங்கள் தமிழின் காப்பாளர்கள் என்று மார் தட்டிக்கொள்கிறார்கள். பிறகு ஏன் தற்போது மக்களின் தமிழ் உச்சரிப்பு உதாரணமாக: வல்லினம், மெல்லினம், இடையினம் இடையே உள்ள வித்தியாசம், ழ என்கிற எழுத்து மற்றும் சில, மிக மிக தரக்குறைவாக உள்ளது?


S.V.Srinivasan
ஜூலை 18, 2024 09:20

தலையில் அடித்துக்கொள்ள இரெண்டு கைகள் போதாது.


RaajaRaja Cholan
ஜூலை 17, 2024 11:27

ஆமாம் திட்டங்களை அறிவிப்பதில் முதலிடம், இதை சொல்லியே இன்பம் அடைந்து கொள்ளலாம், செயல் படுத்த தேவையில்லை போல


S.V.Srinivasan
ஜூலை 17, 2024 11:26

இவரது அறிக்கை விடுக்க வேண்டியது, இவரா பெருமை அடிச்சுக்க வேண்டியது. இதுதான் மூணு வருஷமா நடக்குது. தமிழ் நாட்டில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவு, இதுக்கெல்லாம் நவதுவாரங்களையும் முடிக்க வேண்டியது. கஷ்டமப்பா.


tmranganathan
ஜூலை 16, 2024 07:52

அளவில்லாமல் பொய்மூட்டைகளை அவுத்து விடும் ஆசாமிகள்


MADHAVAN
ஜூலை 15, 2024 13:25

இதே தினமலர் நாளிதழில் நிதி ஆயோக் செய்தி வந்துள்ளது, அதில் உள்ள கருத்துக்களை படிச்சுட்டு இங்க வந்து கருத்துப்போடவும், தமிழக மக்கள் பிஜேபி காரனுங்களை அடித்தும் இன்னும் மக்களுக்கு தொல்லை குடுக்க இவனுங்கப்பண்ணும் முயற்சி


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 15:35

நிடி ஆயோக் அதிகாரிகள் இங்குள்ள அரசுப் பேருந்துகளில் பயணிக்கவில்லை...... அவர்களுக்கும் உயிர் பயம் இருக்காதா?


Sridhar
ஜூலை 15, 2024 12:27

இவனுக அட்ராசிட்டிக்கு அளவே இல்லாம போகுதே இதுல பெருமிதம் வேற ஒரே மிதி கொடுத்தா தான் அடங்குவானுங்க போல


MADHAVAN
ஜூலை 15, 2024 11:51

இந்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தமிழகம் இந்தியாவின் இரண்டாவது இடத்தில உள்ளது, மிகப்பெரிய தொழில் வளம், மிக சிறந்த மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, என்று அணைத்து தேவைகளையும் மிகச்சிறப்பாக கொண்டுள்ளது என்று


MADHAVAN
ஜூலை 15, 2024 11:43

இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு தமிழக மக்களின் உழைப்பு, கல்வி அறிவு, பண்பாடு, தமிழக கலாச்சாரம், மக்களின் சகோதரத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை, இந்த 60 ஆண்டுகால திராவிட சித்தாந்தமே முக்கியகாரணம், 2 ரூபா சங்கிப்பயலுங்க, மிஸ்ஸுடுகளில் சங்கிப்பயலுங்க எங்க காணோம், ஓ இது இந்திய அரசாங்கம் வெளியிட தரவு, இல்லாட்டி பிஜேபி கரனுங்க இதுலயும் பிராடு பண்ணுவானுங்க


பேசும் தமிழன்
ஜூலை 15, 2024 19:37

ஆக மொத்தம்.... நீங்கள் டாஸ்மாக் கடைகளில் க்கு குவாட்டர் வாங்கி குடிப்பதால் தான்.... தமிழகம் முன்னுக்கு வருகிறது என்று கூறினாலும்.... கூறுவீர்கள் போல ???


MADHAVAN
ஜூலை 17, 2024 17:26

டாஸ்மாக் ல சரக்கு வாங்கி குடி குடி னு விளம்பரம் வருதா ? குடிக்காம உன்னால ருக்க முடியுமா ? நீ கள்ளசராயும் குடிச்சு செத்துப்போயிருவ அப்புறம் உன் குடும்பத்தை யாரு காப்பாத்துவது ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை