உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குக்கிராமங்களுக்கு சாலை வசதி: ரூ.4,000 கோடி கேட்கிறது தமிழகம்

குக்கிராமங்களுக்கு சாலை வசதி: ரூ.4,000 கோடி கேட்கிறது தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமரின் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியை, இரண்டு மடங்கு அதிகரிக்க, மத்திய அரசிடம், தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.பிரதமரின் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு, 2014 வரை 100 சதவீத நிதியை, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. ஆனால், 2015 முதல் 60 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத நிதியை, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், இணைப்பு சாலை வசதி இல்லாத 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களுக்கு, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தும் வகையில், சாலைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ், 2019 வரை தமிழகத்தில் 16,296 கி.மீ., ஊரக சாலைகள், 98 பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு, 4,586 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.இதைத் தொடர்ந்து, குக்கிராமங்களுக்கு அருகில் உள்ள சந்தை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணி, 2019ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 2023 வரை 4,449 கி.மீ., சாலைகள், 55 பாலங்கள், 2,883 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளன.மேலும், 2023 - 24ம் ஆண்டு 2,869 கி.மீ., சாலைகள், 28 பாலங்கள் அமைப்பதற்கு, 1,945 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. சாலை பராமரிப்பு பணிக்கான ஊக்கத்தொகையாக, 80 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் வளர்ந்த மாநிலம் என்பதால், ஊரக சாலை மேம்பாட்டு நிதியை, மத்திய ஊரக வளர்ச்சி துறை குறைத்து வருகிறது.இந்நிலையில், தமிழக ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் குழுவினர், சமீபத்தில் டில்லி சென்று, மத்திய அமைச்சர்கள், துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது, 'தமிழகத்திற்கான நிதியை, வளர்ச்சியை காரணம் காட்டி குறைக்க கூடாது. பல கிராமங்களுக்கு சாலை வசதியை மேம்படுத்த வேண்டியுள்ளது. நடப்பாண்டுக்கான நிதியை, 4,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vanishree Balaji
ஆக 11, 2024 08:19

நீயா நானா என்று சொல்லும்போதே நீதான் எல்லேம்மே .


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 11:20

சபரீஷ் ஸ்பான்சர் செய்யலாமே. முதல் ஆண்டிலேயே 30000 கோடி(சுய)ஒதுக்கீடு செய்தவராயிற்றே.


S.V.Srinivasan
ஜூலை 26, 2024 11:11

எந்த ஒரு திட்டத்திற்கும் உங்களிடம் நிதியே இருக்காதா? எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் கைஏந்திரிங்க. ஆனா ஒன்றிய அரசு அது இதுன்னு மத்திய அரசை விமர்சிக்கிறீங்க. மத்திய அரசை அனுசரித்து போனால் தமிழத்திற்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. இதை நீங்க எப்போ புரிஞ்சுக்கப்போறீங்கன்னு தெரியல.


Godyes
ஜூலை 26, 2024 10:07

ஊராட்சி காரனுங்க இதுவரை குக்கிராமங்களுக்கு சாலை வழியாக போனதில்லை..போயிருந்தாக்கா ரோடு போட்டிருப்பானுவ.


Godyes
ஜூலை 26, 2024 10:02

ஊராட்சி தலைவனுங்க ரோடு பக்கம் போனதில்லை.


N Sasikumar Yadhav
ஜூலை 26, 2024 08:27

திராவிட மாடல் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் ஊழலோஊழல் விஞ்ஞானரீதியான ஊழல் . CAG எல்லாம் தணிக்கை செய்வதில்லையா


Kasimani Baskaran
ஜூலை 26, 2024 05:47

என்னது... வளர்ந்த மாநிலத்தில் கிராமப்புறங்களில் சாலைகள் இல்லையா? அப்படியென்றால் அரை நூற்றாண்டு திராவிட சாம்ராட்ஜிய ஆட்சி சரியில்லையா. அநேகமாக கிராமப்புற உபிஸ் பிழைப்புக்கு உதவி என்பது போலத்தான் தெரிகிறது.


Kundalakesi
ஜூலை 26, 2024 05:21

இலவச திட்டங்களை குறைத்தாலே தரமான சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளலாம்


Dharmavaan
ஜூலை 26, 2024 04:54

கொள்ளை ,கமிஷன் டிக்க பணம் போதவில்லை


xyzabc
ஜூலை 26, 2024 03:49

சும்மா கேளுங்க . கேட்டு கோண்டே இருப்போம்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ