உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்: ராமதாஸ்

தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: 'இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் கடுமையான போராட்டத்தை நடத்தினால் தான், இந்த அரசு பணியும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

வன்னியர்களுக்கு 20 சதவீதம், பட்டியல் இன மக்களுக்கு 22 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என வன்னியர் சங்கம் துவங்கிய போதே, தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்துகிறோம்.ஏற்கனவே இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட்டேன். ஆனால், நிறைவேற்றவில்லை.இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற, ஏற்கனவே ஏழு நாட்கள் சாலை மறியல் நடத்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தோம். அதே மாதிரியான போராட்டத்தை நடத்தினால் தான், தமிழக அரசு பணியும் என்றால், விரைவில் அது நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

kulandai kannan
ஜூலை 21, 2024 17:24

அப்படியே ஒலிம்பிக்கிலும் பதக்க ஒதுக்கீடு கேளுங்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 21, 2024 12:29

உங்கள் போராட்டத்துக்கு பயப்படப்போவது அரசாங்கமோ தமிழக மக்களோ அல்ல. பாவம் மிச்சம் மீதி இருக்கும் மரங்கள் மட்டுமே . உங்கள் கட்சி துவங்கியதில் இருந்து, தமிழ் நாடு இருக்கும் வரை " பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே மரம் வெட்டும் கட்சி என்ற பெயர் சரித்திரத்தில் நிலைத்துவிட்டது. இனி யாராலும் அதை மாற்ற முடியாது.


Barakat Ali
ஜூலை 21, 2024 10:32

நிழல் பட்ஜெட்டு மாதிரி நிழல் போராட்டம் நடத்தி மக்களுக்கு கொஞ்சமாச்சும் உபயோகமா இருக்கலாமே ??


PR Makudeswaran
ஜூலை 21, 2024 09:41

இன்னும் கொஞ்சம் மரம் மீதம் இருக்கிறது. அதையும் வெட்டிப் போட்டு விடுங்கள் .மரமும் காணாமல் போகும்: உங்கள் காலமும் ................


கோவிந்தராஜ் கிணத்துக் கடவு
ஜூலை 21, 2024 09:36

எப்படி மரம் வெட்டி சாய்த்தா


Kanns
ஜூலை 21, 2024 09:31

Encounter All Casteist Political Party Leaders. No Mercy


அப்பாவி
ஜூலை 21, 2024 09:03

உருப்படாத போராட்டங்கள் நடத்துவது சிலரது வாடிக்கை. ஒருதடவை மரங்களை வெட்டி ரோட்டில் போட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.


GMM
ஜூலை 21, 2024 08:40

ஜாதி வாரி கணக்கெடுப்பு என்றால், இட ஒதுக்கீடு சதவீதம் போல் ஜாதி வாரி பகுந்து உள்ளாட்சி, மாநில, மத்திய வரி விதிப்பு. அல்லது இட ஒதுக்கீடு பெற்ற சாதி அதனை மறுக்கும் வரை வாக்குரிமை நிறுத்தம். நீதிமன்ற விசாரணையில் இரு பக்கம் பாதிப்பு இருக்காது. இருந்தால் இது போன்ற கோரிக்கை எழாது.


முருகன்
ஜூலை 21, 2024 08:21

தேர்தல் நெருங்க நெருங்க இவரின் பேச்சு அதிகமாக இருக்கும்


Mohamed Malick
ஜூலை 21, 2024 08:04

அடுத்த வசூலுக்கு ரெடியாகி கொள்ளவும் என்று அடிவருடி களுக்கு தகவல் சொல்லுகிறாராம்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ