உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் பயங்கரவாத பயிற்சி விசாரணையில் வாலிபர் பகீர்

திருச்சியில் பயங்கரவாத பயிற்சி விசாரணையில் வாலிபர் பகீர்

சென்னை: தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சாலியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், 26, முஜிபுர் ரஹ்மான், 46 ஆகியோரை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இருவரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்துல் ரஹ்மான் அளித்துள்ள வாக்குமூலம்:சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரான டாக்டர் ஹமீது உசேன், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பது தொடர்பாக, எங்களுக்கு பயிற்சி அளித்தார். முஜிபுர் ரஹ்மான் எங்கள் ஊரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். அங்கு வரும் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்த்தோம்.தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களாக நாங்கள் செயல்பட்டோம். திருச்சியை மையமாக வைத்து ரகசிய கூட்டங்கள் நடத்தினோம். இதற்காக, என் உறவினர் இடத்தை பயன்படுத்தினோம். எங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பண உதவியும் செய்து வந்தோம். அவர்களுக்கு பயங்கரவாதம் தொடர்பான புத்தகங்கள் வழங்கினோம். கரூரிலும் ரகசிய பயிற்சி மையம் நடத்தி வந்தோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்