உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பன் புதிய பாலத்தில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய பாலத்தில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம்: - ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு பெட்டியுடன் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் 2.1 கி.மீ.,ல் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி முழுவீச்சில் நடக்கிறது. இதில் 1.6 கி.மீ.,ல் பாலம் பணி 100 சதவீதம் முடிந்த நிலையில் ஜூலை 12ல் இரு ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 6 காலி சரக்கு பெட்டியுடன் புறப்பட்ட ரயில் இன்ஜின் மூலம் புதிய பாலத்தில் மூன்று முறை சோதனை ஓட்டம் நடத்தினர்.இந்த சோதனையில் புதிய பாலம் உறுதி தன்மை தரமாக உள்ளதாகவும், இன்றும் (ஜூலை 15 ) பாலத்தில் சோதனை ஓட்டம் நடக்கும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ibrahim Ali A
ஜூலை 15, 2024 13:41

வேலைகளை நல்ல ரீதியாக முடிக்க வேண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் பாலத்தை திறக்க வேண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி இது தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி


மேலும் செய்திகள்







புதிய வீடியோ