உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் பேச்சை கலெக்டர் கேட்கணும்; இல்லையென்றால்... தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் தலைமைக்கு நெருக்கடி

என் பேச்சை கலெக்டர் கேட்கணும்; இல்லையென்றால்... தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் தலைமைக்கு நெருக்கடி

தர்மபுரி: ''கலெக்டர், எஸ்.பி., யாராக இருந்தாலும் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்கள் மாவட்டத்தில் இருக்க மாட்டார்கள்,'' என, தி.மு.க.,வின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. இது, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.தி.மு.க.,வின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக, பென்னாகரத்தைச் சேர்ந்த தர்மசெல்வன் கடந்த 23ல் நியமிக்கப்பட்டார்.அவர் பொறுப்பேற்ற பின், கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் தர்மபுரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற அக்கூட்டத்தில், தர்மசெல்வன் பேசியுள்ளார். அப்பேச்சு தொடர்பான ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், தர்மசெல்வன் பேசியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நான் சொல்வதை கேட்காத அதிகாரிகள் இருக்க முடியாது. இதில், யாரும் தலையிட முடியாது. நான் கடிதம் வைத்தால் தான் எதுவுமே நடக்கும். கலெக்டர், எஸ்.பி., யாராக இருந்தாலும் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்கள் இங்கு இருக்க மாட்டார்கள்.என்னை மீறி எதுவும் செய்ய முடியாது. யாரும் என்னை மீறி செயல்பட்டால், அவர்கள் கதை முடிந்து விடும். தலைவர் யார் குறித்தும், கட்சி லெட்டர் பேடில் கடிதம் அளிக்க அறிவுறுத்தியுள்ளார். அது கலெக்டர் உட்பட அனைவருக்கும் பொருந்தும். கீழ் நிலை அதிகாரிகள் குறித்து, பேச விரும்பவில்லை. யாரும் குறுக்கு சால் ஓட்டக்கூடாது. தர்மபுரி பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், இதற்கு முன் எப்படி செயல்பட்டார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இனி நான் சொல்கிறபடிதான் அவர் நடப்பார்.இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வனிடம் விளக்க கேட்க முயன்றோம். அவர் போனை எடுக்கவில்லை. தர்மபுரி மாவட்ட தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் தடங்கம் சுப்பிரமணி, அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் ஆதரவுடன் செயல்பட்டார். பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லாத நிலையில், உதயநிதி மற்றும் சபரீசன் ஆதரவில் மாவட்ட பொறுப்பாளராகி விட்டார். இவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவுடன், கடந்த 2017ல் பென்னாகரத்தில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனை தோற்கடிக்க வேண்டும் என, தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெனியானது. தற்போது, இன்னொரு ஆடியோ வெளியாகி, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆடியோ வெளியான நிலையில், தர்மசெல்வனை கட்சி தலைமை சென்னைக்கு அழைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

RAINBOW
மார் 03, 2025 14:14

இவனுங்க திருந்த மாட்டானுங்க.


Suresh Sivakumar
மார் 01, 2025 21:19

Serupala adi


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 01, 2025 20:18

மாண்புமிகு மதிப்பிற்குரிய மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அப்போதைய திமுக மாவட்டங்கள் வட்டங்கள் காலையில் போலீஸ் ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் சென்று இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் கலெக்டர் நாற்காலியில் அமர்ந்து கொள்வார்கள். கலெக்டர் சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் போன்றவர்கள் எதிரில் நாற்காலி இருந்தாலும் அமரக்கூடாது கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு ஸ்டேண்ட் அட் இஸ் பொஸிஷனில் நின்று கொண்டு அந்த வட்டம் மாவட்டம் என்ன சொல்கிறாரோ அதை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும். இல்லை என்றால் இவர் கூறியது போல தான் கதை முடிந்தது விடும். குடும்பத்தின் கதையே முடித்து விடுவார்கள். பரம்பரை ஆட்சி அது தான் தொடர்கின்றது. மானங்கெட்ட மரியாதை கெட்ட பயந்து நடுங்கும் அதிகாரிகள் காசுக்காக எதை வேண்டுமானாலும் வாடகைக்கு விடும் அதிகாரிகள் இருந்தால் அரசு நிர்வாகம் நிலை இந்த நிலை தான்.


திராவிடன்
மார் 01, 2025 16:18

எவனும் எங்களை ஒன்றும் புடுங்கமுடியாது


A P
மார் 01, 2025 15:42

இந்த மூஞ்சிய பாத்தாலே தெரியுதே . ஆமாம் அந்த கலெக்டரும் போலீஸ் ஆபீசரும் இந்நேரம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கணுமே. அப்படி தகுந்த நடவடிக்கை இதுவரை எடுக்கலேன்னா அவர்களை என்ன என்று சொல்வது. இவன் பேச்சைக் கேட்கும்போது நமக்கு இது ஜனநாயக நாடா அல்லது சுடுகாடா என்று சந்தேகம் எழுகிறது .


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 01, 2025 15:40

உடன்பிறப்புகள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்வதும் கூடிக்கொள்வதும் சகஜம். காவல் துறை உடன்பிறப்பை மூன்று நாட்கள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


nv
மார் 01, 2025 14:21

இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது..


திராவிடன்
மார் 01, 2025 16:19

கிழிச்சீங்க


தமிழ்வேள்
மார் 01, 2025 12:45

மத்திய எல்லை பாதுகாப்பு போலீஸை அனுப்ப வேண்டும்..நாலு லாட்டிகளாவது உடைந்து சிம்பு சிம்பாக உடைந்து தெறிக்கும் வரை இவன் கட்சிக்காரன் பெண்டாட்டி பிள்ளைகள் கண்முன்னே அடித்து உதைத்து வெளுக்க வேண்டும். அடி தாங்க முடியாமல் நவதுவாரங்களிலும் ரத்தம் சொட்ட விட வேண்டும்... இல்லையெனில் இவனெல்லாம் திருந்த மாட்டான்...


Tetra
மார் 01, 2025 12:38

தலைவர்தான் அப்படி சொல்ல சொன்னார் என்று பேச்சாளரே‌ சொல்லிருக்காரே. அப்பறம் என்ன இடியாப்ப சிக்கல்


Anand
மார் 01, 2025 12:34

அதுவே வேறு எவரேனும் இப்படி பேசியிருந்தால் இந்நேரம் காவல்துறை பல குழுக்களை அமைத்து மின்னல் வேகத்தில் தேடி கண்டுபிடித்து கைது செய்திருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை