மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
2 hour(s) ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 13
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளது எடுத்து வயலப்பாடி மற்றும் சின்னாறு ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். மயிலாடுதுறையில் சுற்றித் திரிந்த சிறுத்தை, அரியலுார் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனை அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சாலையை கடந்து கம்பி வேலியை சிறுத்தை தாண்டிச் செல்வதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த புண்ணியகோடி குடும்பத்தினர், மருத்துவமனையில் வேலை பார்த்திருந்தவர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் போலீசார், மருத்துவமனை வளாகத்திலுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர்.இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தெர்மல் ட்ரோன் கேமராவை வைத்து சிறுத்தை இருக்கும் இடத்தை கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதியான வாழப்பாடி மற்றும் சின்னாறு பகுதியில் நேற்று சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர் இதைத்தொடர்ந்து ரூம் சின்னார் பகுதியில் கூண்டு கண்காணித்து வருகின்றனர்சிறுத்தை மயிலாடுதுறையில் இருந்து அரியலூருக்கும் அங்கிருந்து பெரம்பலூருக்கும் தகவலை அறிந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago | 13