உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றாலைகளை புதுப்பிக்க கொள்கை வெளியிட்டது அரசு

காற்றாலைகளை புதுப்பிக்க கொள்கை வெளியிட்டது அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 20 ஆண்டு முடிவடைந்த காற்றாலை மின் நிலையங்களை புதுப்பிக்க, 'தமிழக காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024ஐ' பசுமை எரிசக்தி கழகம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், 1986ல் இருந்து காற்றாலை நிறுவப்பட்டு வருகின்றன.அந்த கொள்கையின்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலைக்கு மாற்றாக, புதிதாக அமைக்கலாம். ஆயுள் நீட்டிக்க விரும்பும் காற்றாலை, கடந்த மூன்று ஆண்டுகளில், 90 சதவீதம் மின் உற்பத்தி செய்திருக்க வேண்டும். இதற்கு கூடுதலாக, 5 ஆண்டு ஆயுள் நீட்டிப்பு வழங்கப்படும்.காற்றாலை மின்சாரத்தை உற்பத்தியாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திடம் வழங்கி, தேவைப்படும்போது வாங்கி கொள்ளலாம். உற்பத்தியாகும் மின்சாரத்தில், 50 சதவீத மின்சாரமே, மின் வாரியம் கொள்முதல் செய்யும்.காற்றாலையை புதுப்பிக்க வளர்ச்சி கட்டணமாக, 1 மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாயை பசுமை எரிசக்தி கழகத்திற்கு செலுத்த வேண்டும். இந்த கொள்கை, 2030 மார்ச், 31 வரை அமலில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
செப் 05, 2024 20:21

ஒரு மெகாவாட் காற்றாலை நிறுவ ஏழு கோடிக்கும் அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. அவ்வளவு முதலீடு செய்யும் நிறுவனங்கள் முப்பது லட்சம் மாநில மின் வாரியத்திற்கு கொடுப்பது பெரிய விஷயம் இல்லை!


Joe Rathinam
செப் 05, 2024 11:53

இந்த கொள்கை காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஏனெனில் ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் தொடராமல் இருப்பது அதாவது ஒரு மாதத்தில் மின் உற்பத்தி தேவையை விட அதிகமாக இருந்தால் அதை மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் பயன்படுத்துவது.


Dr.K.Venkatachalam
செப் 05, 2024 10:19

ஏற்கனவே உபயோகத்தில் இருந்து வரும் காற்றாலை அமைந்துள்ள இடம் முதன் முதலாக 20ஆண்டுக்கு முன்பே வளர்ச்சிக் கட்டணம் செலுத்தப்பட்டு தொடர்ந்து பராமரிப்புக் கட்டணமும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் மீண்டும் ஒரு மெகாவாட்டுக்கு ரூ.30 லட்சம் கட்டச் சொல்லும் கொள்கை புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காகப் பதிலாக முதலீடு செய்யத் தடையாக இருக்காதா ?? இத்திட்டம் மிகப் பெரிய தோல்வியையே சந்திக்கும்..


பாமரன்
செப் 05, 2024 08:51

மிகவும் தாமதமாக வந்தாலும் தேவையான நடவடிக்கை... காற்று சீராக வீசாத பல இடங்களில் உலகில் பதினைந்து முதல் இருபது மெகாவாட் திறனுள்ள காற்றாலை அமைத்து வர்றாங்க... நாம் இன்னும் இருநூற்றைம்பது கிலோ வாட் காற்றாலைகளை பல இடங்களில் வச்சிருக்கோம். உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பீரோவிலா சேர்த்து வைக்க முடியும்...? அந்த ஐம்பது பர்சன்ட் பர்ச்சேஸ் இந்த துறையில் பெரும்பாலும் முதலீடு செய்யும் தனியாரை யோசிக்க வைக்கும்... ஆக்சுவலா இந்த மாதிரி துறைகளில் தேசிய கொள்கை இருந்தால் தான் அதிகம் தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் நிறைவேறும்...


Kasimani Baskaran
செப் 05, 2024 05:12

கடைசி பாரா திராவிட மாடல் கொள்ளை போல தெரிகிறது.


பாமரன்
செப் 05, 2024 08:57

மின்சாரத்தை பேண்ட் பாக்கெட்லேயா எடுத்துட்டு போக முடியும்...?? இதைவிட அதிக கொள்ளை இதே மின்சாரத்தை தேசிய கிரிட்டுக்கு கொண்டு போக நம்ம கம்பெனி அரசு நடத்தும் பவர் க்ரிட் கார்பொரேஷன் வாங்கறதும்... நோகாமல் இப்படி ஒரு நொங்கு கிடைப்பதால் நம்ம கம்பெனி ஸ்பான்ஸர் அடேஷ்னி உள்ளே வரும் வகையில் சமீபத்தில் கொள்கையை மத்திய அரசு மாற்றியதும் தெரியுமா காசி...?


சமீபத்திய செய்தி