உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.,யும், டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவத்தில், டில்லி முதல்வரின் உதவியாளர் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். கடந்த மே 13ம் தேதி கெஜ்ரிவாலை சந்திக்க சென்றபோது, அவரது பாதுகாவலர் பிபப் குமாரால், தான் தாக்கப்பட்டதாக மாலிவால் புகார் கூறினார்.இதில் கைது செய்யப்பட்டுள்ள பிபப் குமார், ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் சூர்ய காந்த், திபாங்கர் தத்தா, உஜ்ஜல் பையான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது. பிபப் குமாரின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம் அமர்வு சரமாரி கேள்வி கேட்டது. அமர்வு கூறியுள்ளதாவது:நாங்கள் பல ஜாமின் வழக்குகளை சந்தித்துள்ளோம். கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் ஜாமின் அளித்துள்ளோம். வழக்கின் போக்கை பொறுத்தே அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த வழக்கில், ஒரு பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். முதல்வரின் வீடு என்பது தனிப்பட்ட அவருடைய பங்களா இல்லை. பொதுமக்கள் என, பலரும் வருவர். அவர்களிடம் இப்படித்தான் கடுமையாக நடந்து கொள்வதா?ஏதோ குண்டர்கள் நுழைந்துவிட்டதுபோல், இவரைத் தாக்கியுள்ளார். தன் உடல்நிலை குறித்து அவர் கூறிய பிறகும் தாக்கியுள்ளார். இது லேசான காயம் தான் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவருக்கு யார் இந்த அதிகாரத்தை அளித்தது?இவ்வாறு அமர்வு கூறியது.இது பொய் வழக்கு என்றும், அரசியல் நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டது என்றும் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார். அரசியல் விவகாரத்துக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. போலீஸ் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படியே விசாரிக்கிறோம் என அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Swaminathan L
ஆக 02, 2024 11:42

உதவியாளருக்காக ஆஜராவது அபிஷேக் சிங் மன்வி இவருடைய ஃபீஸ் தொகையை அந்த உதவியாளரால் கொடுக்க முடிந்தது என்றால் மாலிவாலை விட அந்த உதவியாளர் எவ்வளவு பெரிய ஆள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது இலேசான காயங்கள் தான், சும்மா ஒரு பத்து குத்துகள், நாலு அறைகள், மூன்று உதைகள் மட்டுமே விடப்பட்டது என்று அவர் வாதாடினாலும் ஆச்சரியமில்லை.


Ravishankar
ஆக 02, 2024 11:14

இந்த பிரச்சினைக்கு காரணமே திருவாளர் அபிஷேக் சிங்வீ தான். இவரை MP ஆக்குவதற்காகவே மாலிவாலை ராஜினாமா செய்யச்சொல்ல, அவர் மறுத்ததால் வந்த பிரச்சினை.


அப்பாவி
ஆக 02, 2024 10:13

கேள்வி கேக்கிறதில் இருக்குற சூரத்தனம் குற்றவாளிகளுக்கு தண்டனை குடுப்பதில் இல்லை.


C.SRIRAM
ஆக 02, 2024 10:02

விசாரணை கைதி முதல்வராக தொடரும் அவலம் இந்தியாவில் காட்டும் சாத்தியம். அத்தகு அநீதி மன்றங்களும் உடந்தை . இந்த கேவல அரசியல் வியாதி அவரைப்போலவே இருப்பர்


sankaranarayanan
ஆக 02, 2024 09:32

இங்கே வழக்கின் முக்கியத்தம் குறித்து என்ன வக்கீலாக பேசாமல் கட்சி சார்பில்தான் பேசப்பட்டு ஒரு பெண்மணிக்கு நடந்த அவல நிலைமை இனி யாருக்குமே இந்த நாட்டில் நடக்காமல் இருக்க உச்ச நீதி மனப்பிடமே முன்வந்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தப்பு செய்து ஜாமீனிலோ அல்லது நிரபராதி என்று கூற விடுவதோ நல்லதல்ல


karupanasamy
ஆக 02, 2024 09:25

அபிஷேக் சிங்வி கான்கிராஸ் கட்சி கயவன்.


P Karthikeyan
ஆக 02, 2024 08:43

இத்தனை நடந்தும் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் எப்படி கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் தொடர அனுமதித்துள்ளது ...நீதித்துறையும் ஊழல் துறையே ..தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுகவும் நீதித்துறையும் சேர்ந்து என்ன பாடுபடுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தி அவர் இறப்புக்கே காரணம் ஆகிவிட்டது .


P. S. Ramamurthy
ஆக 02, 2024 07:10

This Advocate is known for appearing big persons who pay him lot of money. No morality with him. It is unfortunate the courts accept him as a super layer and gives verdict in his favor. ALL MONEY / MONEY & MONEY. GOD SAVE OUR COUNTRY.


Dharmavaan
ஆக 02, 2024 07:30

நீதித்துறையும் ஊழல் துறையே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை