உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

செங்கல்பட்டு: விசாரணைக்கு வர மறுத்து தாக்கிய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே சீர்காழி சத்யா என்ற ரவுடியை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அவர் வர மறுத்துவிட்டு போலீசாரை தாக்கி உள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டனர். அதில் சத்யா காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யா உட்படுத்தப்பட்டார். 2021 ல் பா.ஜ.,விலும் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்