உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீட் விழுந்ததற்கு முந்தைய அரசே காரணம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சீட் விழுந்ததற்கு முந்தைய அரசே காரணம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை கண்டக்டர் சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. புதிதாக 7,000 பஸ்கள் வாங்குவதற்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.தற்போது, 350 புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, பஸ்சிலிருந்து இருக்கை விழுந்தது தொடர்பாக, திருச்சி அரசு போக்குவரத்துக் கழக டிப்போ மேனேஜர், தொழில்நுட்ப பிரிவு உதவி பொறியாளர் மற்றும் பஸ் பராமரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை