உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு சர்ஜரி செய்வதில் சிக்கல் ரேபிஸ் நோய் பாதிக்கும் அபாயம்

சிறுமிக்கு சர்ஜரி செய்வதில் சிக்கல் ரேபிஸ் நோய் பாதிக்கும் அபாயம்

சென்னை:சிறுமிக்கு, ரேபிஸ் நோய் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், நாய்களுடன் உரிமையாளர்கள் மதுரை சென்றுள்ளனர்.சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், மாநகராட்சி பூங்காவின் காவலாளியாகவும், பராமரிப்பாளராகவும் ரகு என்பவர் உள்ளார். அதே பூங்காவில் மனைவி சோனியா, 5 வயது மகள் சுரக் ஷாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 5ம் தேதி சிறுமி சுரக் ஷா பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர் குடியிருப்பில் இருக்கும் புகழேந்தி வளர்க்கும் வெளிநாட்டு இன இரண்டு 'ராட்வைலர்' நாய்கள் சிறுமியை கடித்து குதறின.இதில், பலத்த காயமடைந்த சிறுமி, அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அச்சிறுமிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், 'ரேபிஸ்' என்ற வெறிநாய் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கருதுகின்றனர். அவ்வாறு ஏற்பட்டால், சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனை தரப்பில் நிர்வாகிகள் கூறியதாவது:சிறுமிக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அறுவை சிகிச்சைக்கான அனைத்து முன்பரிசோதனைகளும் செய்யப்பட்டுஉள்ளன. அதேநேரம், 'ரேபிஸ்' நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால், 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அந்நோய் ஏற்படாதவாறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படாதபட்சத்தில், அச்சிறுமிக்கு நாளை பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உரிமையாளர் மதுரை பயணம்

நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, தனலட்சுமி, வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேரை கைது செய்து, போலீஸ் ஜாமினில் விடுவித்தனர். அதேநேரம், நாய்களை இரண்டு நாட்களில், தன்னார்வ நிறுவனமான என்.ஜி.ஓ.,விடம் ஒப்படைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல், நாய்களுடன் உரிமையாளர்கள் மதுரை சென்றுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர்களை மொபைல் போனில் அழைத்து விசாரித்த போது, மதுரை சென்று கொண்டிருப்பதாக தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நாய்களின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்து விட்டு சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் இடம் குறித்து கேட்டு வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ