உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஏ.ஓ.,வை தாக்கிய ஆளுங்கட்சி கவுன்சிலரை கைது செய்யணும்

வி.ஏ.ஓ.,வை தாக்கிய ஆளுங்கட்சி கவுன்சிலரை கைது செய்யணும்

சென்னை: 'விக்கிரவாண்டியில், தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய, தி.மு.க., மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார்.அவரது அறிக்கை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஆயந்துார் கிராம ஓட்டுச் சாவடியில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, வி.ஏ.ஓ., சாந்தியை, அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி, கடுமையாக தாக்கியுள்ளார். காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை